தற்போதைய செய்திகள்

நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசு வெற்றி

29th Jul 2019 11:56 AM

ADVERTISEMENT

 

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசு வெற்றி பெற்றது. 

கர்நாடக சட்டப்பேரவையில் அங்கம் வகித்த 14 காங்கிரஸ் எம்எல்ஏக்கள், 3 மஜத எம்எல்ஏக்கள், ஆக மொத்தம் 17 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்து பேரவைத் தலைவர் ரமேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். இதனால், ஒரு நியமன உறுப்பினர் உள்ளிட்ட 225 பேர் கொண்ட சட்டப்பேரவையின் பலம் 208 ஆகக் குறைந்துள்ளது. பேரவைத்தலைவர் நீங்கலாக பேரவையின் பலம் 207 ஆகும்.  

இந்த நிலையில், சட்டப்பேரவையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க 104 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. பாஜகவுக்கு 105 உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.

ADVERTISEMENT

அதனால் சட்டப்பேரவையில் இன்று திங்கள்கிழமை முதல்வர் எடியூரப்பா கொண்டுவரவிருக்கும் தனது பாஜக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதில் எந்தச்சிக்கலும் இருக்காது.  

இந்நிலையில், இன்று பேரவை கூடியதும் முதல்வர் எடியூரப்பா உரையாற்றினார். பின்னர் 11 மணியளவில் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கியது. நம்பிக்கை வாக்கெடுப்பில் எம்எல்ஏக்கள் தங்களது ஆதரவை குரல் வாக்கெடுப்பு மூலம் பதிவு செய்தனர். குரல் வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசு வெற்றி பெற்றது சபாநாயகர் ரமேஷ்குமார் அறிவித்தார்.

தேவையான பெரும்பான்மையை பெற்று தன்னுடைய முதல்வர் பதவியை எடியூரப்பா தக்கவைத்துக்கொண்டார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT