தற்போதைய செய்திகள்

சத்தீஸ்கரில் 2 நக்சல்கள் சுட்டுக் கொலை

29th Jul 2019 12:33 PM

ADVERTISEMENT


சுக்மா: சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் இன்று பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் உள்ள கண்ஹையிகுடா கிராம வனப்பகுதியில் இன்று துணை ஆய்வாளர் ஜென்ரல் சுந்தரராஜ் தலைமையில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இன்று காலை 7 மணியளவில் அப்பகுதி காடுகளில் மறைந்திருந்த நக்சல்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை ஏற்பட்டது. இதில் ஒரு பெண் உட்பட 2 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்ற்றப்பட்டன. 

தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். 

ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 3 வரை மாவோயிஸ்டுகள் தியாகிகள் வாரம் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் பாதுகாப்பு படையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT