தற்போதைய செய்திகள்

அத்திவரதரை தரிசிக்க 31-ம் தேதி காஞ்சீபுரம் வருகிறார் மோடி

29th Jul 2019 08:33 AM

ADVERTISEMENT


காஞ்சீபுரம்: சயனக் கோலத்தில் காட்சி தரும் அத்திவரதரையும், நின்ற கோலத்தில் காட்சி தரும் அத்திவரதரை தரிசிப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி வரும் 31 ஆம் தேதி காஞ்சீபுரம் வருகிறார். 

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயில் வஸந்த மண்டபத்தில் அத்திவரதர் சயனக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஜூலை முதல் தேதி முதல் சயனக்கோலத்தில் அருள்பாலித்து வரும் அத்திவரதர் வரும் 31-ஆம் தேதி வரை 31 நாள்கள் அதே கோலத்திலும், வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை அத்திவரதர் நின்ற கோலத்திலும் பக்தர்களுக்கு காட்சியளிக்கவுள்ளார்.

40 ஆண்டுகளுக்கு ஒருமுறையே அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார் என்பதால் தினசரி ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். அத்திவரதர் வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் நின்ற கோலத்தில் காட்சியளிக்கவுள்ளார். இதனிடையே சயனக் கோலத்தில் அத்திவரதரை தரிசிக்க விரும்பும் பக்தர்கள் காஞ்சிபுரம் நோக்கி வெள்ளமெனத் திரண்டு வருகின்றனர். 

இந்நிலையில், சயனக் கோலத்தில் காட்சி தரும் அத்திவரதரையும், நின்ற கோலத்தில் காட்சி தரும் அத்திவரதரை தரிசனம் செய்வதற்காக, பிரதமர் நரேந்திர மோடி வருகிற 31 ஆம் தேதி காஞ்சீபுரம் வருகிறார். அவருடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதி அமைச்சர் நிர்மலாசீதாராமன் ஆகியோரும் வருகிறார்கள். அத்திவரதரை தரிசித்து விட்டு மோடி ஹெலிகாப்டர் மூலம் சென்னை விமான நிலையம் செல்கிறார்.

ADVERTISEMENT

அன்று இரவு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள் தங்குகின்றனர். மறுநாள் ஆகஸ்டு 1 ஆம் தேதி நின்ற கோலத்தில் காட்சி தரும் அத்திவரதரை பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் தரிசிக்கின்றனர்.

மோடி வருகைக்கான ஏற்பாடுகள் குறித்து பிரதமர் அலுவலக முதன்மைச் செயலாளர் சத்யபிரகாஷ் காஞ்சீபுரத்தில் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் அவர் மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவில், ஆதிவராக பெருமாள் கோயில்களில் சாமி தரிசனம் செய்தார்.

 தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசித்து வருகின்றனர். பலமணி நேரம் காத்திருந்து பக்தர்கள் அத்திவரதரை தரிசிக்கின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT