தற்போதைய செய்திகள்

காஷ்மீர் என்கவுன்ட்டரில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி முன்னா லஹோரி சுட்டுக் கொலை

27th Jul 2019 07:59 PM

ADVERTISEMENT


ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தளபதிகளில் ஒருவரும், வெடிகுண்டு தயாரிப்பில் நிபுணத்துவம் பெற்ற பாகிஸ்தான் தீவிரவாதி முன்னா லஹோரி(19) ஜம்மு தெர்கு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர். 

ஜம்மு காஷ்மீர் மாநிலம், சோபியான் மாவட்டம் உள்ள பாண்டே மொஹல்லா போன்பஜார் என்ற இடத்தில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பது வெள்ளிக்கிழமை மாலை பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இதையடுத்து சிறப்பு நடவடிக்கைக் குழுவுடன் அங்கு விரைந்த துணை ராணுவத்தினர், தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது வீரர்களை நோக்கி தீவிரவாதிகள் தாக்குதல் தொடுக்கவே, துப்பாக்கிச் சண்டை தொடங்கியது. நள்ளிரவில் தொடங்கிய துப்பாக்கிச் சண்டையில் விடிய விடிய நடந்தது. இதில், இன்று சனிக்கிழமை அதிகாலை ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தளபதிகளில் ஒருவரும், வெடிகுண்டு தயாரிப்பில் நிபுணத்துவம் பெற்ற பாகிஸ்தான் தீவிரவாதியான முன்னா லஹோரி(19), அவரது கூட்டாளியான ஜீனத் உல் இஸ்லாம் என்ற மற்றொரு தீவிரவாதியும் கொல்லப்பட்டார். அந்த இடத்தில் இருந்த ஆயதங்கள் மற்றும் வெடிமருந்துகள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

வெடிகுண்டு தயாரிப்பில் நிபுணத்துவம் பெற்ற முன்னா லஹோரி, ஜீனத் உல் இஸ்லாமுடன் சேர்ந்து தெற்கு காஷ்மீரில் தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டியதாகவும், கடந்த ஆண்டு பாகிஸ்தானில் இருந்து காஷ்மீருக்குள் ஊடுருவியவன் என்றும், காஷ்மீர் இளைஞர்களை மூளைச் சலவை செய்து இயக்கத்தில் சேர்க்கும் பொறுப்பையும் கவனித்து வந்ததாக கூறப்படுகிறது. நேரடித் தாக்குதலில் உயிர் சேதம் ஏற்படும் என்பதால், வாகனங்களில் வெடிகுண்டுகளை பொருத்தி தாக்குதல் நடத்துவதில் முன்னா லஹோரி கைதேர்ந்தவன்.  என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கடந்த ஜூன் மாதம் 17 ஆம் தேதி புல்வாமாவின் அரிஹால் என்ற இடத்தில் ராணுவ வாகனம் மீது பயங்கர கார் குண்டிவெடிப்பு நிகழ்த்தி இரு வீரர்கள் உயிரிழக்கக் காரணமானவன் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். 

காஷ்மீரில் புர்ஹான் வாணிக்கு முக்கிய தீவிரவாதியாகவும், பாதுகாப்புப் படையினரால் நீண்டகாலமாக தேடப்பட்டு வந்த தீவிரவாதியுமான முன்னா லஹோரி சுட்டுக்கொல்லப்பட்து மிகப்பெரிய வெற்றி என தெரிவித்துள்ளனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT