தற்போதைய செய்திகள்

8 வழிச்சாலை திட்டத்திற்காக யாரையும் வற்புறுத்தி நிலத்தை கையகப்படுத்த மாட்டோம்: முதல்வர் பழனிசாமி 

22nd Jul 2019 02:49 PM

ADVERTISEMENT


சேலம்: சேலம் - சென்னை 8 வழிச்சாலை எனப்படும் அதிவிரைவு சாலை திட்டத்திற்காக யாரையும் வற்புறுத்தி நிலத்தை கையகப்படுத்த மாட்டோம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 

சேலத்தில் இன்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 100 ஏரிகளில் உபரிநீரை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். மேட்டூர் அணைக்கு போதிய காவிரி நீர் வந்தவுடன் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு சொட்டு நீராக இருந்தாலும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் அதை முறைப்படி பயன்படுத்த  தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. தமிழக அரசு விவசாயிகளுக்கு எதிரான அரசு அல்ல.

8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென சிலர் ஆதரவு தெரிவிக்கின்றனர். சிலர் எதிர்க்கின்றனர். நவீன முறைப்படி அதிவிரைவுச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. விவசாயிகள் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. சேலம் - சென்னை 8 வழிச்சாலை எனப்படும் அதிவிரைவு சாலை திட்டத்திற்காக யாரையும் வற்புறுத்தி நிலத்தை கையகப்படுத்தும் நிலை அரசுக்கு கிடையாது.  

தமிழகத்தில் புதிய தொழிற்சாலைகள் அமைய வேண்டுமானால் உள்கட்டமைப்பு சிறப்பாக இருக்க வேண்டும். நிறைய தொழிற்சாலைகள் வந்தால்தான் வேலைவாய்ப்பை அதிகரிக்க முடியும். 

ADVERTISEMENT

மேலும் எந்த உண்மையான அதிமுக. தொண்டரையும் யாரும் தொட்டு பார்க்க முடியாது என முதல்வர் பழனிசாமி கூறினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT