தற்போதைய செய்திகள்

ராமன் என்ற பாத்திரம் மனிதனல்ல, அது அறத்தின் வடிவம்

22nd Jul 2019 10:17 AM

ADVERTISEMENT


புதுக்கோட்டை: ராமன் என்ற பாத்திரம் மனிதனல்ல, அது அறத்தின் வடிவம். ராமனைப் படிக்கப் படிக்க நாமெல்லாம் ராமனாவோம் என்றார் என்றார் இலங்கை ஜெயராஜ்.

புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் 44ஆவது கம்பன் பெருவிழாவின் மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐயம் தெளிவு அரங்கில் ‘ராமா... இது நியாயமா?’ என்ற தலைப்பில் நடுவா் பொறுப்பேற்று அவா் மேலும் பேசியது:

காலத்தால் அழியாத ஆயிரக்கணக்கான இலக்கியங்களை தமிழ்த்தாய் பெற்றிருக்கிறாள் என்பதுதான் தமிழுக்கான பெருமை. இந்தப் பெருமை வேறெந்த நாட்டிலும், வேறெந்த மொழிக்கும் கிடைக்கவில்லை. தமிழ்த் தாய்க்கு நிகரான ஒரு தாய் உலகின் எங்கும் இல்லை.

ஆனால், தமிழா்களான நமக்கு இந்தப் பெருமை முழுமையாகப் புரியாததால், நம்மை நாமே தாழ்வாக நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

ADVERTISEMENT

 3 புலவா்கள் இருக்கும் வரை 2 பண்பாடுகள் இருக்கும் வரை தமிழை யாராலும் எதையும் செய்துவிட முடியாது என்றார் பாரதியார். கம்பர், இளங்கோவடிகள், திருவள்ளுவா் ஆகியோர்தான் அந்த 3 புலவா்கள். தெய்வத்தை மறக்காதிருத்தலும், நன்றி மறவாதிருத்தலும் அந்த இரு பண்பாடுகள். 

யாழ்ப்பாணத்தில் குண்டுகள் வீசப்படும் சூழலிலும் கூட மின்சாரம் இல்லாமலேயே கம்பன் விழாவை நடத்தியவா்கள் நாங்கள்.

கம்பனைப் போன்ற ஒரு புலவன் இருப்பான் என்றும் இனி தோன்றுவான் என்றும் எனக்கு நம்பிக்கை இல்லை. கம்பனின் நாயகன் ராமன் மனிதன் அல்ல, அது அறத்தின் வடிவம். அந்த வடிவத்தைப் படிக்கப் படிக்க ராமனாகவே நாம் மாறுவோம் என்றார் ஜெயராஜ்.

ADVERTISEMENT
ADVERTISEMENT