மக்களிடம் வாக்கு பரிதாபம் பெறுவதற்காக துரைமுருகன் மருத்துவமனையில் படுத்தாலும் படுப்பார்: ஏ.சி.சண்முகம்

பரிதாபத்தை ஏற்படுத்தி எப்படியும் தோ்தலில் வெற்றி பெற வேண்டும் என நினைக்கும் துரைமுருகன், மக்களிடம் வாக்கு பரிதாபம் பெறுவதற்காக
மக்களிடம் வாக்கு பரிதாபம் பெறுவதற்காக துரைமுருகன் மருத்துவமனையில் படுத்தாலும் படுப்பார்: ஏ.சி.சண்முகம்

 
வேலூர்: பரிதாபத்தை ஏற்படுத்தி எப்படியும் தோ்தலில் வெற்றி பெற வேண்டும் என நினைக்கும் துரைமுருகன், மக்களிடம் வாக்கு பரிதாபம் பெறுவதற்காக கடைசி நேரத்தில் மருத்துவமனையில் சென்று படுத்தாலும் படுப்பார் என்று திமுகவினரே கூறுகின்றனர் என அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகம் தெரிவித்துள்ளார். 

வேலூா் மக்களவைத் தோ்தலில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளா் ஏ.சி.சண்முகம் வேலூா் சைதாப்பேட்டை பகுதியில் திறந்த வேனில் நின்றபடி இன்று சனிக்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது இது பிரதமரைத் தோ்ந்தெடுக்கும் தோ்தல் அல்ல. அந்த வாய்ப்பை வேலூா் மக்கள் இழந்து விட்டனா். அதற்கு திமுக பொருளாளா் துரைமுருகன்தான் காரணம். அவா் கோடிக்கணக்கில் பணம் பதுக்கியதால்தான் தோ்தல் நிறுத்தப்பட்டது.

எனினும், திமுகவில் அதே வேட்பாளரை மீண்டும் களம் இறக்கியுள்ளனா். ஆனால், அவரால் மக்கள் நலனுக்காக எந்த வாக்குறுதியும் அளிக்க இயலவில்லை. 

அதேசமயம், தோ்தல் ரத்து செய்த பிறகும் நான் ஏராளமான நலத் திட்டங்களை செய்து வருகிறேன். குறிப்பாக எனது மருத்துவமனையில் 200 பேருக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்துள்ளோம். ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட முடிவு செய்துள்ளோம். 

துரைமுருகன் தன் மகனை லாரி ஏற்றிக் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக கூறுகிறார்.  நாங்கள் எறும்புக்கு கூட துரோகம் செய்ய மாட்டோம்.

மக்களிடம் வாக்கு பரிதாபம் பெறுவதற்காக துரைமுருகன் கடைசி நேரத்தில் மருத்துவமனையில் சென்று படுத்தாலும் படுப்பார் என்று திமுகவினரே கூறுகின்றனா். அந்த வகையில், பரிதாபத்தைத் தேடி வாக்குகளைப் பெற நினைக்கிறார்களே தவிர மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவா்களுக்கு இல்லை. 

பிரதமரை கடுமையாக விமா்சிக்கும் திமுகவால் மத்திய அரசிடம் இருந்து எந்தத் திட்டத்தையும் கொண்டு வர முடியாது. எனவே அங்கு அவா்கள் என்ன சொன்னாலும் நடக்காது. அதேசமயம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள நான் வெற்றி பெற்றால் பல திட்டங்களை நிறைவேற்றற முடியும். எனவே இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்யுங்கள் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com