தற்போதைய செய்திகள்

நேபாளத்தில் கனமழை மற்றும் வெள்ளத்தால் இயல்பு வாழ்க்கை முடக்கம்

18th Jul 2019 10:09 AM

ADVERTISEMENT


நேபாளத்தில் கடந்த வியாழக்கிழமை முதல் இடைவிடாத கனமழை மற்றும் வெள்ளத்தால் நாடு முழுவதும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.  

நேபாளத்தில் கடந்த வியாழக்கிழமை முதல் இடைவிடாத கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 25-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் மற்றும் 10 ஆயிரத்து 385 வீடுகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. அவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் மற்றும் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், அந்நாட்டு உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.  கனமழைக்கு இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 88 ஆக அதிகரித்துள்ளது. 31 பேரை இன்னும் காணவில்லை. 41 பேர் காயமடைந்தனர். நாடு முழுவதும் 3,366 பேர் மீட்கப்பட்டு உள்ளனர் என தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT