சென்னையில் மாற்றமின்றி தொடரும் பெட்ரோல் டீசல் விலை!

சுமார் 15 ஆண்டுகளாக  எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப மாதம் இருமுறை பெட்ரோல் மற்றும் டீசல் விலையை
சென்னையில் மாற்றமின்றி தொடரும் பெட்ரோல் டீசல் விலை!


சென்னையில் பெட்ரோல், டீசல் நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி இன்று விற்பனையாகிறது.

சுமார் 15 ஆண்டுகளாக  எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப மாதம் இருமுறை பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைக்கும் நடைமுறை  கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கைவிடப்பட்ட நிலையில், நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து விற்பனை செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி, தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

 இந்நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், டீசல் நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது. அதன்படி ஒரு லிட்டர் ரூ.76.03 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.69.96 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  இந்த விலை காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2019-20 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், பெட்ரோலியப் பொருள்களின் விற்பனையின் மூலம், ஆண்டுக்கு ரூ.24,000 கோடி முதல் ரூ.28,000 கோடி வரை நிதி திரட்டும் வகையில், அதன் மீதான கலால் வரி, சாலை மற்றும் உள்கட்டமைப்பு செஸ் வரி தலா ரூ.2 உயர்த்தப்படுவதாக அறிவித்திருந்தார். 

 இதையடுத்து, நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட மறுதினமே சனிக்கிழமை அதிகரித்தன. இதன்படி, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 2.57 உயர்ந்து, ரூ.75.76-க்கு விற்பனை செய்யப்பட்டது. டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.52 உயர்ந்து, ரூ. 70.48-க்கு விற்பனையானது.

 மத்திய நிதிநிலை அறிக்கையில் வரி உயர்வு அறிவிப்பு வெளியிடப்படும் முன்பு, பெட்ரோல் மீது லிட்டருக்கு மொத்தம் ரூ.17.98 சுங்க வரி விதிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த வரி லிட்டருக்கு மொத்தம் ரூ. 19.98-ஆக அதிகரித்தது.

 டீசலை பொறுத்தமட்டில், பட்ஜெட்டில் வரி உயர்வு அறிவிப்பு வெளியிடப்படும் முன்பு, அதன்மீது லிட்டருக்கு ரூ.13.83 வரி விதிக்கப்பட்டது. தற்போது அந்த வரி லிட்டருக்கு மொத்தம் ரூ.15.83-ஆக உயர்ந்துள்ளது. மத்திய அரசின் மேற்கண்ட வரிகள் தவிர்த்து, மாநிலங்களும் பெட்ரோல், டீசல் மீது வாட் வரி விதிக்கின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com