தற்போதைய செய்திகள்

காமராஜர் மணிமண்டபத்தை காணொலி காட்சி மூலம் முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்!

15th Jul 2019 10:12 AM

ADVERTISEMENT


ரூ.25 கோடி செலவில் 12 ஏக்கர் பரப்பளவில் விருதுநகரில் அமைக்கப்பட்டுள்ள கல்விக் கண் திறந்த காமராஜரின் மணிமண்டபத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.

கல்விக் கண் திறந்த காமராஜருக்கு மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட கள்ளிக்குடியில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், தமது சொந்த செலவில் காமராஜருக்கு மணிமண்டபம் கட்டி உள்ளார்.  இதனை, காமராஜரின் 117-வது பிறந்த தினமான இன்று திங்கள்கிழமை (ஜூலை 15) சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். 

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், ராதிகா சரத்குமார், பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் மற்றும் தமிழக செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோரும் கலந்து கொண்டனர்.  

ADVERTISEMENT
ADVERTISEMENT