செவ்வாய்க்கிழமை 16 ஜூலை 2019

பாஜக எம்எல்ஏ கொலை வழக்கில் தேடப்பட்ட நக்ஸல் சுட்டுக் கொலை

DIN | Published: 12th July 2019 03:49 PM


சத்தீஸ்கா்:  கடந்த ஏப்ரல் மாதம் சத்தீஸ்கரில் பாஜக எம்எல்ஏ பீமா மண்டவி, 4 போலீஸார் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த நக்ஸல் தீவிரவாதி பாதுகாப்புப் படையினரால் இன்று வெள்ளிக்கிழமை(ஜூலை 12) சுட்டுக் கொல்லப்பட்டார். 

கடந்த ஏப்ரல் மாதம் பாஜக எம்எல்ஏ பீமா மண்டவி, 4 போலீஸார் உயிரிழக்க காரணமான நக்ஸல் தீவிரவாதி ஹூராவை போலீஸார் தேடி வந்தனர். இவரை காண்போர் தகவல் அளித்தால் ரூ.5 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் அறிவித்தும், இவரை போலீஸார் தேடி வந்த நிலையில், சுக்மா மாவட்டத்தின் மிஸ்ஸி தாபா வனப்பகுதியை பாதுகாப்புப் படையினா் இன்று வெள்ளிக்கிழமை சுற்றி வளைத்தனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த நக்ஸல் தீவிரவாதிகள், பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். 

இதையடுத்து, பாதுகாப்புப் படையினரும் தக்க பதிலடி கொடுத்தனர். இருதரப்புக்கும் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு நக்ஸல் தீவிரவாதியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. சுட்டுக் கொல்லப்பட்ட நக்ஸல் தீவிரவாதி, பாஜக எம்எல்ஏ பீமா மண்டவி, 4 போலீஸார் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த நக்ஸல் தீவிரவாதி ஹூரா என்பது தெரியவந்துள்ளது. 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

ப.சிதம்பரம் வெற்றியை எதிர்த்து தேர்தல் வழக்கு: முன்னாள் மாவட்ட ஆட்சியரிடம் குறுக்கு விசாரணை
கர்நாடக அரசியல் நெருக்கடி:  விகிதாசார பிரதிநிதித்துவ முறையே தீர்வு
பொன் மாணிக்கவேல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கு: அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
அரசு மருத்துவர்கள் தொடர் உண்ணாவிரதம்: புறநோயாளிகள் சிகிச்சையை புறக்கணிக்கத் திட்டம்
பள்ளிக் கல்வித் துறை இயக்குநருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்: ஹெச்ஐவி பாதித்த மாணவரை பள்ளியில் சேர்க்க மறுத்த விவகாரம்