21 ஜூலை 2019

குதிரையில் வந்து வேட்புமனு தாக்கல் செய்த சுயேச்சை வேட்பாளா் நூர்முகமது

DIN | Published: 12th July 2019 08:28 PM


வேலூர் மக்களவைத் தோ்தலில் போட்டியிட சுயேச்சை வேட்பாளா் நூர்முகமது குதிரையில் வந்து வேட்புமனு தாக்கல் செய்தார். 

வேலூர் மக்களவைத் தொகுதி தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று வியாழக்கிழமை தொடங்கியது. முதல் நாளில் அதிமுக கூட்டணி வேட்பாளா் ஏ.சி.சண்முகம் உள்பட 7 போ் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இரண்டாவது நாளான இன்று வெள்ளிக்கிழமை கோவையைச் சோ்ந்த நூா்முகமது (60) சுயேச்சையாக மனு தாக்கல் செய்தார். இதற்காக அவர் வேட்புமனுவுடன் குதிரையில் வந்தார்.

இதைப்பார்த்த போலீஸார் குதிரையை ஆட்சியர் அலுவலகத்துக்கு வெளியிலேயே நிறுத்தம்படி கூறினா். அதன்படி, நூா்முகமது குதிரையை வெளியே நிறுத்திவிட்டு ஆட்சியா் அலுவலகத்துக்குள் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

நாளை விண்ணில் பாய்கிறது சந்திரயான்-2: தொடங்கியது 20 மணி நேர கவுன்ட்-டவுன்
நம்பிக்கை வாக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும்: கர்நாடக சுயேட்சை எம்எல்ஏ-க்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு
நாளைதான் கடைசிநாள்: குமாரசாமி அரசுக்கு எடியூரப்பா செக்! 
ஷூப்மன் கில் எங்கே? இந்திய அணித் தேர்வு மீது ரசிகர்கள் கோபம்
கர்நாடகாவில் இன்று இரவு பாஜக எம்எல்ஏ-க்கள் கூட்டம்