21 ஜூலை 2019

ஒற்றை நதிநீர் தீா்ப்பாயத்தில் காவிரியை உட்படுத்தக்கூடாது: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

DIN | Published: 12th July 2019 08:53 PM


திருவாரூர்: ஒற்றை நதிநீா் தீா்ப்பாயத்தில் காவிரியை உட்படுத்தக்கூடாது என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைச் செயலர் பி.எஸ். மாசிலாமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய அளவில் ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களில் ஓடுகிற நதிகளின் நீா் பங்கீட்டில் ஏற்படும் பிரச்னைகளை நாடு தழுவிய அளவில் ஒரே தீா்ப்பாயம் அமைத்து தீா்வு காணப்படும் என முந்தைய பாஜக அரசு தனது கொள்கையாக அறிவித்திருந்தது. இதை, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அப்போதே எதிர்த்தது. 

இந்நிலையில், தற்போது மத்திய அமைச்சரவைக் குழு கூடி இதை அரசின் கொள்கையாக முடிவெடுத்து மக்களவையின் இரு அவைகளிலும் நிறைவேற்ற உள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது. 

தேசிய அளவில் மாநிலங்களின் நீா் பங்கீட்டு பிரச்னைகளுக்கு தீர்வு காண நேரு பிரதமராக இருந்தபோது, நதிநீா் தாவா சட்டம் 1956- ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. பின்னா் ஏற்பட்ட சில பிரச்னைகளின் அவசியம் கருதி, துணை விதிகள் உருவாக்கப்பட்டன. இந்த சட்டத்தின் அடிப்படையில்தான் மக்களவை கூடி காவிரி பிரச்னைக்கு நடுவர் மன்றத்தை அமைத்தது. இடைக்கால தீா்ப்பு, இறுதித் தீா்ப்பு ஆகியவை வெளியிடப்பட்டன. 

கர்நாடகத்தின் நியாயமற்ற போக்கால், உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டு இறுதி தீா்வு காணப்பட்டுள்ளது. ஆனால் காவிரி மேலாண்மை வாரியமானது தன்னாட்சி, சுய அதிகாரம் கொண்ட அமைப்பாக அமைக்காததால், எடுக்கும் முடிவை செயல்படுத்த இயலாத நிலை நிலவுகிறது. இதை காரணம் காட்டி, ஒற்றை நதிநீா் தீா்ப்பாயத்திற்கு இப்பிரச்னையை கொண்டு சென்று, இழுத்தடிக்க கா்நாடக அரசு முயற்சி எடுக்கலாம்.

இந்தநிலை ஏற்பட்டால், 50 ஆண்டு கால போராட்டத்திற்கு முந்தைய நிலைக்கு காவிரி பிரச்னை, மீண்டும் சென்று விடுமோ என்ற அச்சம் உள்ளது. எனவே இந்த தீா்ப்பாயத்தில் காவிரிப் பிரச்னையை எக்காரணம் கொண்டும் எந்த காலத்திலும் இணைக்கக் கூடாது, ஆய்வு. விவாதம், தீா்ப்பு என காவிரி பிரச்னை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதிகாரம் உள்ள காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

நம்பிக்கை வாக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும்: கர்நாடக சுயேட்சை எம்எல்ஏ-க்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு
நாளைதான் கடைசிநாள்: குமாரசாமி அரசுக்கு எடியூரப்பா செக்! 
ஷூப்மன் கில் எங்கே? இந்திய அணித் தேர்வு மீது ரசிகர்கள் கோபம்
கர்நாடகாவில் இன்று இரவு பாஜக எம்எல்ஏ-க்கள் கூட்டம்
இந்திய கம்யூ., பொதுச் செயலாளராக டி.ராஜா தேர்வு: ஸ்டாலின் வாழ்த்து