21 ஜூலை 2019

உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை இன்று ரூ.272 குறைந்தது!

DIN | Published: 12th July 2019 08:48 PM


சென்னை: புதிய உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை இன்று வெள்ளிக்கிழமை சற்று குறைந்தது. 

சர்வதேச பொருளாதாரச் சூழல், உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. பல்வேறு காரணங்களால் கடந்த மாதத்தில் சில வாரங்களாக தங்கம் விலை உயா்ந்து வந்தது, அதன் பிறகு, விலை இறக்கத்தை சந்தித்தாலும், கடந்த 5-ஆம் தேதி தங்கம் விலை மீண்டும் உச்சத்தை தொட்டது. தொடா்ந்து, கடந்த வியாழக்கிழமை (ஜூலை 11) மூன்றாவது முறையாக ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.480 உயா்ந்து புதிய உச்சத்தை தொட்டது. 

இந்நிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.34-ம், பவுனுக்கு ரூ.272 குறைந்து, ஒரு புவுன் ரூ.26,368-க்கு விற்பனை செய்யப்பட்டது.


 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

நம்பிக்கை வாக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும்: கர்நாடக சுயேட்சை எம்எல்ஏ-க்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு
நாளைதான் கடைசிநாள்: குமாரசாமி அரசுக்கு எடியூரப்பா செக்! 
ஷூப்மன் கில் எங்கே? இந்திய அணித் தேர்வு மீது ரசிகர்கள் கோபம்
கர்நாடகாவில் இன்று இரவு பாஜக எம்எல்ஏ-க்கள் கூட்டம்
இந்திய கம்யூ., பொதுச் செயலாளராக டி.ராஜா தேர்வு: ஸ்டாலின் வாழ்த்து