21 ஜூலை 2019

அரசு பள்ளிகளில் சிசிடிவி கண்காணிப்புக் கேமரா: உச்ச நீதிமன்றத்துக்கு கேஜரிவால் நன்றி

DIN | Published: 12th July 2019 03:11 PM


புது தில்லி: தில்லி அரசு பள்ளிகளில் சிசிடிவி கண்காணிப்புக் கேமராக்களை பொருத்தும் தில்லி அரசின் திட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்துக்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடா்பாக தனது டுவிட்டர் பக்க பதிவில், பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், வெளிப்படைத் தன்மையைப் பேணவும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும் தில்லி பள்ளிகளுக்கு சிசிடிவி கண்காணிப்புக் கேமரா மிக முக்கியமானது. தில்லி அரசின் இந்த திட்டத்துக்கு முட்டுக் கட்டை போடும் வகையில் ஆரம்பம் முதலே சில சக்திகள் மும்முரமாக இயங்கின. 

இந்நிலையில், சிசிடிவி கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தும் தில்லி அரசின் திட்டத்துக்கு தடைவிதிக்க மறுத்ததற்காக உச்ச நீதிமன்றத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளோம் என்று கூறியுள்ளார். 

CCTV in schools is extremely important to ensure safety of students and bring transparency and accountability in the system. However, certain forces r trying to scuttle it right from the beginning. We r grateful to Hon’ble SC for refusing to stay the process

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

நம்பிக்கை வாக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும்: கர்நாடக சுயேட்சை எம்எல்ஏ-க்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு
நாளைதான் கடைசிநாள்: குமாரசாமி அரசுக்கு எடியூரப்பா செக்! 
ஷூப்மன் கில் எங்கே? இந்திய அணித் தேர்வு மீது ரசிகர்கள் கோபம்
கர்நாடகாவில் இன்று இரவு பாஜக எம்எல்ஏ-க்கள் கூட்டம்
இந்திய கம்யூ., பொதுச் செயலாளராக டி.ராஜா தேர்வு: ஸ்டாலின் வாழ்த்து