தற்போதைய செய்திகள்

2018-19-ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்

4th Jul 2019 12:08 PM

ADVERTISEMENT

 

புதுதில்லி: 2018-19-ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தின் மக்களவையில் தாக்கல் செய்தார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். 2019-20 கால ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7% ஆக இருக்கும் ஆய்வு அறிக்கை கணிக்கப்பட்டுள்ளது. 

இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்றுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் 2018-19 ஆம் ஆண்டுக்கான முதல் நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் நாளை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்கிறார்.

பல்வேறு துறைகளில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்த ஆய்வறிக்கையானது, நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முந்தைய நாளில் சமர்ப்பிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில், கடந்த 2018-19 நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். 

ADVERTISEMENT

கடந்த நிதியாண்டில் நிதிப்பாற்றக்குறை 5.8% உள்ளது என்றும், இது 2019 நிதியாண்டில் 6.4% ஆக இருக்கும். 2019-20 ஆம் ஆண்டுக்கான நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 

2025-ஆம் ஆண்டில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற, இந்தியா மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதத்தை 8% ஆக வைத்திருக்க வேண்டும்.

இந்த நிதி ஆண்டில் எண்ணெய் விலை குறையும் என்றும், கடன் வளர்ச்சி 2020 நிதியாண்டில் அதிகமாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT