தற்போதைய செய்திகள்

முல்லை பெரியாறில் வாகன நிறுத்துமிடம்: கேரள மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் 

4th Jul 2019 01:37 PM

ADVERTISEMENT


புதுதில்லி: முல்லை பெரியாறில் வாகன நிறுத்துமிடம் கட்டும் கேரள மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. 

முல்லை பெரியாறு அணை பகுதியில் கேரள அரசு வாகன நிறுத்துமிடம் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு செய்திருந்தது. 

இந்த முறையீட்டு மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம், முல்லை பெரியாறு வாகன நிறுத்துமிடம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவை பின்பற்ற மாட்டீர்களா?, உத்தரவை மீறி எதற்காக கட்டுமானப் பணி மேற்கொள்கிறீர்கள்?, வாகன நிறுத்துமிடம் தொடர்பாக கேரள அதிகாரிகள் பொய் சொல்கிறார்கள். எத்தனை வாகன நிறுத்துமிட கட்டுமான பணிகளை மேற்கொள்வீர்கள்? என சரமாரி கேள்விகளை கேட்ட உச்ச நீதிமன்றம், கேரள அரசின் செயல்களுக்கு கண்டனம் தெரிவித்ததுடன், 15 நாட்களுக்குள் தங்களின் பதிலை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT