தற்போதைய செய்திகள்

விமான ஓடுபாதையில் இருந்து விலகிய ஸ்பைஸ் ஜெட் விமானம்: அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர்தப்பினர்

2nd Jul 2019 08:05 AM

ADVERTISEMENT


மும்பை விமான நிலையத்தில் ஓடுபாதையில் இருந்து ஸ்பைஸ் ஜெட் விமானம் விலகிச்சென்றது. இந்த சம்பவத்தில் பயணிகள் யாரும் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். 

மும்பை கடந்த 4 தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், மும்பை மாநகரமே வெள்ளத்தில் மிதந்து வருகிறது. பொதுமக்களின் இயல்பு பாதித்தது. பேருந்துகள், ரயில்கள், விமானங்களின் சேவைகள் முற்றிலும் பாதித்தது. இதனால் பெருமளவில் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டன. நேற்று பெய்த மழையில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை வெள்ளம் ஏற்பட்டது. இதனிடையே, இன்னும் 3 தினங்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், ஜெய்பூரில் இருந்து நேற்று இரவு 11.45 மணியளவில் மும்பை வந்த ஸ்பைஸ்ஜெட் விமானம் தரையிறங்கும் போது ஓடுபாதையில் இருந்து விலகிச்சென்றது. இந்த சம்பவத்தில் பயணிகள் யாரும் காயங்களின்றி அதிர்ஷ்டவசமாக உயிரிழந்தனர். 

இதுகுறித்து விமானநிலைய ஊழியர்கள் கூறுகையில், மழையால் ஓடுபாதையில் ஏற்பட்ட ஈரப்பதம் அதிகமாக இருந்ததால், ஜெய்ப்பூரில் இருந்து வந்த ஸ்பைஸ்ஜெட் விமானம் தரையிறங்கும் போது ஓடுபாதையை ஓட்டிச் சென்றதாக தெரிவித்தனர். 

ADVERTISEMENT

இந்த சம்பவத்திற்கு பின்னர் பிரதான ஓடுபாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கனமழை காரணமாக மும்பை வரவேண்டிய சில சர்வதேச விமானங்கள் பெங்களூரு, அகமதாபாத் போன்ற பிற விமான நிலையங்களுக்கு  திருப்பி விடப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT