மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து திருப்பூரில் இந்து முன்னணி சார்பில் பிரமாண்டமான பேரணி மற்றும் பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருப்பூரில் குமரன் சிலை முன்பாக இந்து முன்னணி சார்பில் இந்தப் பேரணியை மாநிலச் செயலாளர் ஜெ.எஸ்.கிஷோர் குமார் தொடங்கிவைத்தார். இதில், இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம், இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், பெண்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இந்தப் பேரணியானது திருப்பூர் யுனிவர்சல் திரையரங்கம் அருகே நிறைவடைந்தது. இதையடுத்து, இந்து முன்னணி சார்பில் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி அளவில் பிரமாண்ட பொதுக்கூட்டமும் நடைபெறவுள்ளது. இதில், புதிய தமிழகம் கட்சி நிறுவனர் மருத்துவர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்று சிறப்புரையாற்றுகின்றனர்.
முன்னதாக இந்தப் பேரணியில் பங்கேற்ற தொண்டர்கள் சுமார் 100 மீட்டர் நீளம் கொண்ட தேசியக் கொடியை ஏந்திச் சென்றனர்.