தற்போதைய செய்திகள்

வாஜ்பாய் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மோடி மரியாதை

25th Dec 2019 09:45 AM

ADVERTISEMENT


புது தில்லி:   முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 95-வது பிறந்த நாளை முன்னிட்டு தில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். 

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 95-வது பிறந்தநாள் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தில்லி ராஷ்டிரிய ஸ்மிருதி ஸ்தல் பகுதியில் உள்ள அவரது  'சதைவ் அடல்' நினைவிடத்தில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். 

அவரது நினைவிடம் அருகே சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா நினைவிடம் அருகே சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, அமித் ஷா மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர். 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT