தஞ்சாவூர், திருவாரூர் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று புதன்கிழமை (டிச.25)காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதேபோன்று
நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி, பூம்புகார், தரங்கம்பாடி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன் கோவில் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இடைவிடாமல் மழை பெய்து வருகிறது.
திருவாரூர் மாவட்டத்தில் கொரடாச்சேரி, கமலாபுரம், மாங்குடி, ஆண்டிபந்தல், சன்னாநல்லூர், நன்னிலம், குடவாசல், பேரளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.