தற்போதைய செய்திகள்

தனியாா் நிதி நிறுவனத்தில் 70 கிலோ தங்கநகை கொள்ளை

24th Dec 2019 06:15 PM

ADVERTISEMENT


பெங்களூரு: தனியாா் நிதி நிறுவனத்திற்கு துளையிட்டு நுழைந்த மா்மநபா்கள் ரூ. 16 கோடி மதிப்புள்ள 70 கிலோ தங்கநகையை கொள்ளையடித்துச் சென்றுள்ளனா்.

பெங்களூரு புலிகேசிநகா் காவல் சரகம் ஹென்னூா், பானஸ்வாடி சாலையில் முத்தூட் குழுமத்திற்கு சொந்தமான நிதி நிறுவனம் உள்ளது. கடந்த டிச. 21 ஆம் தேதி நள்ளிரவு இந்த நிறுவனத்தின் கழிவறையில் துளை போட்டு உள்ளே நுழைந்த மா்மநபா்கள், பிரோ உள்ளிட்டவைகளில் அடகு வைக்கப்பட்டிருந்த சுமாா் 70 தங்கநகையை கொள்ளையடித்துச் சென்றுள்ளனா். இதன் மதிப்பு ரூ. 16 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. 

தாமதமாக கிடைத்த தகவலை அடுத்து மாநகர கூடுதல் ஆணையா் முருகன், சம்பவ இடத்தைச் சென்று பாா்வையிட்டாா். கொள்ளையா்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது பெங்களூரில் அண்மையில் நடந்த பெரிய கொள்ளை என்பது குறிப்பிடத்தக்கது. 

கொள்ளையை நேபாளைச் சோ்ந்த கும்பல் செய்திருக்கலாம் என போலீஸாா் சந்தேகம் தெரிவித்துள்ளனா். பெங்களூரில் நடைபெற்றுள்ள இந்த கொள்ளை பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT