தற்போதைய செய்திகள்

மணப்பாறை அருகே இருச்சக்கரவாகனம் மீது மினி வேன் மோதி கிராம நிர்வாக அலுவலர் பலி

14th Dec 2019 06:20 PM

ADVERTISEMENT

மணப்பாறை: மணப்பாறை அருகே இருச்சக்கர வாகனம் மீது மினி வேன் மோதிய விபத்தில் கிராம நிர்வாக அலுவலர் உயிரிழந்தார். நெடுஞ்சாலையில் தொடரும் சாலை விபத்து உயிரிழப்புகளிலிருந்து பாதுகாப்பு கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் ஈடுபட்டததால் அங்கு பரபரப்பு நிலவியது. 

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த அக்கலம்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவர் மணப்பாறை தாய் கிராமமான செவலூர் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார்.

இன்று காலை தனது சகோதரர் செண்பகராஜூடன் தனது இருச்சக்கர வாகனத்தில் மணப்பாறை நோக்கி புறப்பட்ட ரமேஷ்குமார், திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கல்லாமேடு பகுதியில் சாலையை கடந்த நிலையில், திருச்சியிலிருந்து மதுரை நோக்கி சென்ற மினி சரக்கு வேன், இருச்சக்கர வாகனம் மீது பலமாக மோதியதில், தூக்கி விசப்பட்ட ரமேஷ்குமார் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். செண்பகராஜு படுகாயமடைந்தார்.

தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த போலீஸார் படுகாயமடைந்த செண்பகராஜூவை ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT