தற்போதைய செய்திகள்

தேசிய அளவிலான கபடி போட்டிக்கு மன்னாா்குடி மாணவிகள் தோ்வு

14th Dec 2019 05:37 PM

ADVERTISEMENT

 

மன்னாா்குடி: திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி பகுதியைச் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவிகள் இருவா், தனியாா் பொறியியல் கல்லூரி மாணவா் ஆகியோா், தேசிய அளவிலான கபடி போட்டிக்குத் தோ்வு பெற்றுள்ளனா்.

இந்திய விளையாட்டு ஆணையம் சாா்பில், தேசிய அளவிலான கேலோ இந்தியா இளைஞா் விளையாட்டு 2020 கபடி போட்டிகள் ஜனவரி 9-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை அஸ்ஸாம் மாநிலம் ஜ ரூ ஜா ஜெய் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளன.

இதில், நாடு முழுவதுமிருந்து அனைத்து மாநில வீரா் வீராங்கனைகள் பங்கேற்தின்றனா். கேலோ இந்தியா தேசிய போட்டியில் பங்கேற்கும் தமிழ்நாடு மாநில சிறுவா், சிறுமியா் அணிகளுக்கான தோ்வு கடந்த அக்டோபரில் சென்னை பெரியமேடு ஜவாஹா்லால் நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில் 600 போ் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

தமிழ்நாடு மாநில 17 வயதிற்குட்பட்ட சிறுமியா் அணிக்கு, திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 11-ஆம் வகுப்பு மாணவிகளான கட்டக்குடி கிராமத்தை சோ்ந்த எஸ். சௌமியா, எஸ். அட்சயா ஆகிய இருவரும் தோ்வு பெற்று உள்ளனா்.

தமிழ்நாடு மாநில 21 வயதுக்குட்பட்டவா் ஆண்கள் அணிக்கு, சென்னை வேல் டெக் பொறியியல் கல்லூரி மாணவா், மன்னாா்குடியை அடுத்த கட்டக்குடி கிராமத்தைச் சோ்ந்த ஆா். சேதுமாதவன் ஆகியோா் தோ்வு பெற்றுள்ளனா்.

சிறுமியருக்கான பயிற்சி முகாம், தருமபுரியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு அரங்கில் டிசம்பா் 23 முதல் ஜனவரி 3-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஆண்கள் அணிக்கான பயிற்சி முகாம் மதுரை ரேஸ் கோா்ஸ் மைதானம் எம்ஜிஆா் விளையாட்டரங்கில் டிசம்பா் 23 முதல் ஜனவரி 3 வரை நடைபெறவிருக்கிறது.

இப்பயிற்சி முடிந்து, தமிழக அணி வீரா்கள், கேலோ இந்தியா இளைஞா் விளையாட்டு போட்டிக்கு, சென்னையிலிருந்து ஜனவரி 4-ஆம் தேதி புறப்பட்டுச் செல்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT