தற்போதைய செய்திகள்

குற்றால அருவியில்  திடீர் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகளை உடனடியாக வெளியேற்றம்

14th Dec 2019 06:38 PM

ADVERTISEMENT


கோவை: கனமழை காரணமாக கோவை குற்றால அருவியில்  திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து சுற்றுலா பயணிகளை உடனடியாக வெளியேற்றினர் வனத்துறையினர்.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை காரணமாக  கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு  கடந்த மூன்று மாதங்களாக பராமரிப்பு பணிகள் நடைபெற்று நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தான் குற்றால அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை அனுமதி அளித்திருந்தனர்.

இந்நிலையில் இன்று காலை முதலே சிறுவாணி அணை நீர் பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வந்த நிலையில் அருவில்யில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனையடுத்து அங்கு பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர் சுற்றுலா பயணிகள் பத்திரமாக மீட்டு வெளியே அனுப்பி வைத்தனர். 

மேலும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர் மேலும் மழை நீடித்தால் நாளையும் சுற்றுலா பயணிகளை அனுமதிக்கப்படமாட்டார்கள் என போளுவாம்பட்டி வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

- வி.பேச்சிகுமார்

ADVERTISEMENT
ADVERTISEMENT