தற்போதைய செய்திகள்

நியூ ஜெர்சியில் துப்பாக்கிச் சூடு: போலீஸ் அதிகாரி உட்பட 6 பேர் உயிரிழப்பு

11th Dec 2019 08:13 AM

ADVERTISEMENT


  
நியூயார்க்:  அமெரிக்காவின் நியூஜெர்சியில் இருவேறு இடங்களில் மர்ம நபர்கள் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் போலீஸ் அதிகாரி உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள சூப்பர் மார்க்கெட் உள்பட 2 இடங்களில் துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்கள் 2 பேரை போலீஸார் சுட்டுக்கொன்றனர்.

நியூஜெர்சி நகரின் செமின்ட்ரி பகுதியில் நேற்று செவ்வாய்கிழமை பிற்பகலில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில்,  போலீஸார் அதிகாரி ஒருவர் பலியானார். பின்னர் துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர்கள் லாரியில் தப்பிச் சென்று அதே பகுதியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் பொதுமக்கள் மீது  துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில், 5 பேர் பலியானதாகவும், குடியிருப்பு பகுதியில் நடந்த இந்த தாக்குதல் ஒரு போர் மண்டலம் போல காட்சி அளித்ததாக,  நியூஜெர்சி நகர போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். 

இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என்றும், உயிரிழந்தவர்களில் சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்தவர்களில் 3 பேர், துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர்கள் 2 பேர் மற்றும் போலீஸ் அதிகாரி ஒருவர் என தெரிவவந்துள்ளது. உயிரிழந்த போலீஸ் அதிகாரி டிடெக்டிவ் ஜோசப் சீல்ஸ்(40). நியூஜெர்சி நகர காவல் துறையில் நீண்டகாலம் பணிபுரிந்தவர் மற்றும் 5 குழந்தைகளுக்கு தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது.  இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

ADVERTISEMENT

துப்பாக்கிச் சூட்டில் மேலும் இரண்டு போலீஸ் அதிகாரிகள் மற்றும்  பொதுமக்கள் ஒருவர் என 3 பேர் காயமடைந்துள்ளனர். அவர் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 

Tags : New Jersey shooting
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT