தற்போதைய செய்திகள்

தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துகொள்வோரின் பாஜகவினரின் பட்டியல் வெளியீடு!

27th Aug 2019 10:36 AM

ADVERTISEMENT

 

சென்னை: தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொள்ளும் தமிழக பாஜகவினரின் பெயர் பட்டியலை தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ளார்.

தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொள்ளும் பாஜகவினருக்கு சம வாய்ப்புகள் மறுக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து, கடந்த ஜூலை மாதம் முதல் தமிழ்நாடு பாஜகவினர் எவ்வித ஊடக விவாதங்களிலும் கலந்துகொள்ளாமல் இருந்தனர். 

இந்நிலையில், இன்று மீண்டும் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்கள் ஊடக விவாதங்களில் கலந்து கொள்வார்கள் என தமிழிசை அறிவித்துள்ளார். 

ADVERTISEMENT

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஜக மாநில பொதுச் செயலாளர் கே.எஸ். நரேந்திரன் விவாதங்களில் கலந்து கொள்வோருக்கான ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஊடக விவாதங்களில் பங்கேற்போரின் பட்டியல் அதன்படி, வானதி சீனிவாசன், நைனார் நாகேந்திரன், கே.டி. ராகவன், ஸ்ரீனிவாசன், எஸ்.ஆர். சேகர் உட்பட 27 பேர் கே.எஸ். நரேந்திரனால் ஒருங்கிணைக்கப்பட்டு விவாதங்களில் கலந்து கொள்வார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களின் கருத்துகள் மட்டுமே கட்சியின் அதிகாரப்பூர்வ கருத்துக்களாக ஏற்றுக்கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT