பெண்கள் குறித்து தவறாக பேசியதற்கு குருமூர்த்தி மன்னிப்பு கேட்க வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்

பெண்கள் முன்பு போல இப்போது இல்லை. அவர்களிடம் பெண்மை குறைந்துவிட்டது. பெண்ணிற்கும், பெண்மைக்கும் வித்தியாசம் இருக்கிறது.
பெண்கள் குறித்து தவறாக பேசியதற்கு குருமூர்த்தி மன்னிப்பு கேட்க வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்

 
சென்னை: பெண்கள் குறித்து தவறாக பேசியதற்கு குருமூர்த்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.  

துக்ளக் ஆசிரியர் எஸ். குருமூர்த்தி தற்போது ஆர்பிஐ இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார். அரசியல் ஆலோசகராக இருக்கும் இவர் பாஜக கட்சித் தலைவர்களுடன் மிகவும் நெருக்கமானவர். தமிழகத்திலும் அதிமுக தலைவர்களுடன் நெருக்கமாக இருக்க கூடியவர். சமீபத்தில் துணை குடியரசுத் தலைவர் சென்னையில் வெளியிட்ட புத்தக விழாவிலும் நடிகர் ரஜினிகாந்த் அமர்ந்திருந்த அதே மேடையில் இவரும் காணப்பட்டார். என்ன பேசினார் இந்த நிலையில் 

சென்னை தனியார் மருத்துவமனை ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எஸ். குருமூர்த்தி கலந்துகொண்டு பேசுகையில், இந்தியாவில் பெண்மை உள்ள பெண்கள் 30 சதவீதம் பேர்தான் உள்ளனர். பெண்கள் முன்பு போல இப்போது இல்லை. அவர்களிடம் பெண்மை குறைந்துவிட்டது. பெண்ணிற்கும், பெண்மைக்கும் வித்தியாசம் இருக்கிறது. இப்போது இந்தியாவில் பெண்மை உள்ள பெண்கள் குறைந்துவிட்டனர். பெண்மை இல்லாத பெண்கள் அதிகம் ஆகிவிட்டனர். பெண்கள் பெண்மையை இழந்து வருவது வருத்தம் அளிக்கிறது என பேசியிருப்பது சர்ச்சையை எழுப்பியுள்ளது. 

குருமூர்த்தியின் பேச்சுக்கு மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், பெண்களை குருமூர்த்தி தவறாக பேசியது கண்டிக்கத்தக்கது . தமிழ் சமூகத்திற்கு விரோதமானது. 

பெண்கள் குறித்து தவறாக பேசியதற்கு குருமூர்த்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com