பெண்களை படமெடுத்து மிரட்டிய தமிழக மென் பொறியாளர் கைது

அதிக சம்பளத்துடன் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 600 பெண்களை ஏமாற்றி ஆபாச புகைப்படங்களை வாங்கிய சென்னை மென்பொருள் பொறியாளரை ஹைதராபாத் போலீஸôர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
பெண்களை படமெடுத்து மிரட்டிய தமிழக மென் பொறியாளர் கைது

அதிக சம்பளத்துடன் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 600 பெண்களை ஏமாற்றி ஆபாச புகைப்படங்களை வாங்கிய சென்னை மென்பொருள் பொறியாளரை ஹைதராபாத் போலீஸôர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

சென்னையைச் சேர்ந்த மென்பொறியாளர் ராஜ்செழியன் (எ) பிரதீப். வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றை போலியாகத் தொடங்கி நடத்தி வந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், முக்கிய 5 நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் அதிக சம்பளத்துடன் "வரவேற்பாளர்' பணியாற்ற பெண்கள் தேவை என்று விளம்பரம் செய்துள்ளார். இதை நம்பி நாடு முழுவதிலும் இருந்து பல பெண்கள் அவரை தொடர்பு கொண்டனர். 

அந்த பெண்களும் வேலை கிடைக்கும் என்று நம்பிய நிலையில், அவர்களை மயக்கிய ராஜ்செழியன், அவர்களின் ரகசிய புகைப்படங்களை பெற்றதாகக் கூறப்படுகிறது. 16 மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 600 பெண்களை இவ்வாறு செழியன் ஏமாற்றி புகைப்படங்களைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.  பின்னர், அவர்களை மிரட்டி பணம் பறிக்கும் செயலில் ராஜ்செழியன் ஈடுபட்டதாகத் தெரிகிறது.  இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் அளித்த புகாரின்பேரில், வழக்குப் பதிந்த ஹைதராபாத் மியாப்பூர் போலீஸார், ராஜ் செழியனை வெள்ளிக்கிழமை கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 செல்லிடப்பேசிகளை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். மேலும், அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com