இந்தியாவில் பெண்மை உள்ள பெண்கள் 30% பேர்தான்: எஸ்.குருமூர்த்தி சர்ச்சை பேச்சு

பெண்கள் பெண்மையை இழந்து வருவது வருத்தம் அளிக்கிறது. நான் அனுபவப்பட்டது, இந்திய பெண்கள் மற்ற நாட்டு பெண்களுக்கு இணையற்றவர்கள். ஆனால் அவர்கள் தற்போது
இந்தியாவில் பெண்மை உள்ள பெண்கள் 30% பேர்தான்: எஸ்.குருமூர்த்தி சர்ச்சை பேச்சு


சென்னை: இந்தியாவில் பெண்மை உள்ள பெண்கள் 30 சதவீதம் பேர்தான் உள்ளனர் என்று இந்திய ரிசர்வ் வங்கி இயக்குநர்களில் ஒருவரும், துக்ளக் ஆசிரியருமான எஸ். குருமூர்த்தி பேசியிருப்பது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

துக்ளக் ஆசிரியர் எஸ். குருமூர்த்தி தற்போது ஆர்பிஐ இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார். அரசியல் ஆலோசகராக இருக்கும் இவர் பாஜக கட்சித் தலைவர்களுடன் மிகவும் நெருக்கமானவர். தமிழகத்திலும் அதிமுக தலைவர்களுடன் நெருக்கமாக இருக்க கூடியவர். சமீபத்தில் துணை குடியரசுத் தலைவர் சென்னையில் வெளியிட்ட புத்தக விழாவிலும் நடிகர் ரஜினிகாந்த் அமர்ந்திருந்த அதே மேடையில் இவரும் காணப்பட்டார். என்ன பேசினார் இந்த நிலையில் 

சென்னை தனியார் மருத்துவமனை ஒன்றின் 10 ஆம் ஆண்டு நிறைவு விழா நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. இதில் எஸ். குருமூர்த்தி கலந்துகொண்டு பேசுகையில், இந்தியாவில் பெண்மை உள்ள பெண்கள் 30 சதவீதம் பேர்தான் உள்ளனர். நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து உயருவதற்கு காரணம் நம் குடும்பம். அதன் மையமாக இருப்பவர்கள் தான் பெண்கள். 

ஆனால் பெண்கள் முன்பு போல இப்போது இல்லை. அவர்களிடம் பெண்மை குறைந்துவிட்டது. பெண்ணிற்கும், பெண்மைக்கும் வித்தியாசம் இருக்கிறது. இப்போது இந்தியாவில் பெண்மை உள்ள பெண்கள் குறைந்துவிட்டன. 

பெண்மை இல்லாத பெண்கள் அதிகம் ஆகிவிட்டனர். பெண்மை உள்ள பெண்கள் தான் தெய்வம். அவர்களைதான் நாம் தெய்வமாக மதித்து வந்துள்ளோம். 

பெண்மை இல்லாத பெண்களை நாம் தெய்வமாக வணங்க மாட்டோம். அவர்களை அப்படி என்னால் ஏற்க முடியாது. விஞ்ஞானப்படி அப்படி சொல்லவும் முடியாது. பெண்கள் பெண்மையை இழந்து வருவது வருத்தம் அளிக்கிறது. நான் அனுபவப்பட்டது, இந்திய பெண்கள் மற்ற நாட்டு பெண்களுக்கு இணையற்றவர்கள். ஆனால் அவர்கள் தற்போது பெண்மையை இழந்து வருவது அதிர்ச்சி அளிக்கிறது. ஒரு பெண்மையை உருவாக்க பெண்ணால் மட்டுமே முடியாது, அவர்களின் சூழ்நிலையும் மிக முக்கியமானது என்று கூறினார். 

பெண்மை குறித்த குருமூர்த்தியின் பேச்சு பெரிய பரபரப்பையும், சர்ச்சையும் ஏற்படுத்தி உள்ளது. குருமூர்த்தி பெண்களை இழிவுபடுத்தி பேசியிருப்பதாக சமூக ஊடகங்களில் அவருக்கு எதிராக பலரும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com