காஷ்மீர் சென்ற ராகுலை திருப்பி அனுப்பிய அதிகாரிகள்: அரசியல் செய்கிறார் ராகுல்- ஆளுநர் சத்யபால் மாலிக்    

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கிய பிறகு, சட்டம்-ஒழுங்கை கருத்தில் கொண்டு அந்த மாநிலத்தில் பல்வேறு
காஷ்மீர் சென்ற ராகுலை திருப்பி அனுப்பிய அதிகாரிகள்: அரசியல் செய்கிறார் ராகுல்- ஆளுநர் சத்யபால் மாலிக்    

ஜம்மு-காஷ்மீருக்கு இன்று சனிக்கிழமை சென்ற எதிர்க்கட்சித் தலைவர்களை அந்த மாநில அதிகாரிகள் திருப்பி அனுப்பி உள்ளனர். 

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கிய பிறகு, சட்டம்-ஒழுங்கை கருத்தில் கொண்டு அந்த மாநிலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. 

ஜம்மு-காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்துக்குப் பிறகு, எதிர்க்கட்சித் தலைவர்களை அந்த மாநிலத்துக்குச் செல்ல மத்திய அரசு அனுமதிக்கவில்லை.

இந்நிலையிலையில், கடந்த வாரம் காஷ்மீர் சென்ற ஸ்ரீநகர், ஜம்முவில் குலாம் நபி ஆஸாத் தடுத்து நிறுத்தப்பட்டார். டி.ராஜா, ஸ்ரீநகர் விமான நிலையம் வரை சென்று அனுமதி கிடைக்காத காரணத்தால் திரும்பினார். 

ஜம்மு-காஷ்மீரின் உண்மை நிலவரத்தை காண ராகுல் காந்தி வர வேண்டும் என அழைக்கிறேன். அவரை அழைத்து வருவதற்கு விமானத்தை அனுப்பத் தயாராக உள்ளேன். அதன்பிறகு உண்மை நிலவரத்தைப் பார்த்துவிட்டு, அவர் பேச வேண்டும். ராகுல் காந்தி பொறுப்பான தலைவர். அவர் இதுபோல பேசியிருக்கக் கூடாது.
மத கண்ணோட்டத்தில் ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படவில்லை. நாட்டு மக்கள் அனைவரின் நலனுக்காகவும்தான் அது ரத்து செய்யப்பட்டது. 

உண்மை நிலவரத்தை பார்வையிடுவதற்கு ஜம்மு-காஷ்மீருக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வரலாம் என்று ஆளுநர் சத்ய பால் மாலிக் அழைப்பு விடுத்துள்ளார்.

இதற்கு விமானம் எல்லாம் வேண்டாம். எந்தவொரு நிபந்தனையும் இல்லாமல் எப்போதும் காஷ்மீர் மக்களை சந்திக்க முடியும்? என்று அந்த மாநில ஆளுநர் சத்யபால் மாலிக்கிடம் ராகுல் காந்தி சமீபத்தில் கேட்டிருந்தார்.

இதனிடையே, சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை அடுத்து, அந்த மாநிலத்தின் நிலைமையை ஆய்வு செய்ய எதிர்க்கட்சியான காங்கிரஸ், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ராஷ்ட்ரீய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மூத்த தலைவர்கள் ஜம்மு-காஷ்மீருக்குச் சென்று அந்த மாநில மக்களை சந்திக்கவுள்ளதாகவும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான குலாம் நபி ஆஸாத், ஆனந்த் சர்மா ஆகியோருடன் ராகுல் காந்தியும் செல்கிறார் என தகவல்கள் வெளியானது. 

இதையடுத்து தற்போதைய நிலைமையில் ஜம்மு-காஷ்மீருக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் வர வேண்டாம் என்றும், எதிர்க்கட்சித் தலைவர்களின் வருகை காஷ்மீர் பள்ளத்தாக்கில் படிப்படியாக திரும்பிவரும் அமைதியும், இயல்பு வாழ்க்கையும் பாதிக்க காரணமாகிவிடும். கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள பகுதியில் அவர்கள் செல்ல முயற்சி செய்வதும் விதிமீறலாகும் என்று  அறிவுறுத்தி அந்த மாநில அரசு நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. 

இந்நிலையில், இன்று சனிக்கிழமை காஷ்மீர் நிலவரம் குறித்து ஆய்வு செய்யவதற்காக ராகுல் காந்தி தலைமையில் 12 எதிர்க்கட்சி தலைவர்கள் தில்லியில் இருந்து ஸ்ரீநகர் சென்றவர்களை அந்த மாநில அரசு அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளனர். 

இந்த நிலையில் ராகுல் காந்தியை நல்லெண்ண நோக்கத்தில் காஷ்மீருக்கு அழைத்திருந்தேன், ஆனால் அவர் அரசியல் செய்யத் தொடங்கியுள்ளார். இது அரசியல் நடவடிக்கை தவிர வேறில்லை. இந்த நேரத்தில் கட்சிகள் தேசிய நலனை மனதில் கொள்ள வேண்டும் என ஜம்மு-காஷ்மீர் மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com