வெள்ளிக்கிழமை 20 செப்டம்பர் 2019

தாய்மொழி கல்விக்கு அடுத்தபடியாகவே மற்ற மொழிகள் இருக்க வேண்டும்: வெங்கய்ய நாயுடு பேச்சு

DIN | Published: 24th August 2019 05:19 PMசென்னை: எந்த மொழி படித்தாலும் தாய்மொழி கல்விக்கு அடுத்தபடியாகவே மற்ற மொழிகள் இருக்க வேண்டும் என குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார். 

தர்மமூர்த்தி ராவ் பகதூர் அறக்கட்டளையின் நிறுவனர் 150வது பிறந்தநாள் விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கலந்து கொண்டு பேசுகையில், உயர் தர கல்வியை வழங்க தேசிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. புதிய கல்விக்கொள்கை தேவையான ஒன்று என்றும், ஆங்கிலம், தெலுங்கு, பிரெஞ்ச் உள்ளிட்ட எந்த மொழி படித்தாலும் தொடக்க கல்வி தாய்மொழி கல்வியாக இருக்க வேண்டும் என்றும், மற்ற மொழிகள் எல்லாம் அடுத்தபடியாகவே அமைய வேண்டும் எனக் கூறினார். 

தொடர்ந்து பேசிய வெங்கய்ய நாயுடு, நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று தெரிவித்த வெங்கய்ய நாயுடு, துரித உணவுகளை தவிர்த்து ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும் என்றும், உணவு பழக்கம் குறித்து கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்க வேண்டும். மக்கள் நியாயமான முறையில் சம்பாதிக்க வேண்டும், அப்படி சம்பாதித்த பணத்தில் சமூகப் பணிக்கும் செலவிட வேண்டும். இந்தியா எந்த நாட்டின் மீது தாக்குதல் நடத்தவில்லை என்று கூறினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : VenkaiahNaidu தர்மமூர்த்தி ராவ் பகதூர் அறக்கட்டளை வெங்கய்ய நாயுடு குடியரசுத் துணைத் தலைவர் சென்னை பல்கலைக்கழகம்

More from the section

கார்ப்பரேட் வரியைக் குறைத்து நிர்மலா சீதாராமன் அறிவிப்பு: பங்குச் சந்தைகளில் அதிரடி உயர்வு
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தேனி தனிப்படை போலீஸார் விசாரணை
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: தேசிய தேர்வு முகமைதான் பதிலளிக்க வேண்டும் - அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
மின்சாரம், தண்ணீர் துண்டிக்கப்பட்ட பிறகும் பங்களாவை காலி செய்யாத முன்னாள் எம்.பி.க்கள்!
உள்நாட்டு நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி குறைப்பு: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு