தற்போதைய செய்திகள்

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 6 நீதிபதிகள் நியமனம்: நீதிபதிகளின் எண்ணிக்கை 58 ஆக உயர்வு

23rd Aug 2019 10:01 PM

ADVERTISEMENT


சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றிய 6 நீதிபதிகளை, நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றிய 6 நீதிபதிகளை, நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க கோரிய மத்திய சட்ட அமைச்சக பரிந்துரைக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கியுள்ளார். 

இதன் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றிய, நீதிபதிகள் எஸ்.ராமதிலகம், ஆர்.தாரணி, பி.ராஜமாணிக்கம், டி.கிருஷ்ணவள்ளி, ஆர்.பொங்கியப்பன், ஆர்.ஹேமலதா ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார். 

இதன் மூலம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது. நீதிபதிகளுக்கான காலியிடங்கள் 17 ஆக குறைந்துள்ளது. 

ADVERTISEMENT

நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளவர்களுக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணி பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT