வெள்ளிக்கிழமை 20 செப்டம்பர் 2019

ஏ.டி.எம் கார்டுகளை ரத்து செய்ய திட்டம்: எஸ்பிஐ வங்கி அதிரடி அறிவிப்பு

DIN | Published: 20th August 2019 02:01 PM


புதுதில்லி: பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக ஏ.டி.எம். கார்டுகளை ரத்து செய்ய பாரத் ஸ்டேட் வங்கி திட்டமிட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து ஏ.டி.எம் எந்திரங்களிலும் யோனோ வசதி கொண்டுவரப்படும் என பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் ரஜினீஸ் குமார் தெரிவித்துள்ளார்.

பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக ஏ.டி.எம்.கார்டுகளை ரத்து செய்ய பாரத் ஸ்டேட் வங்கி திட்டமிட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து ஏ.டி.எம் எந்திரங்களிலும்ம் யோனோ வசதி கொண்டுவரப்படும். இந்த வசதியை பயன்படுத்த ஷயோனோ' கேஷ் அப்ளிகேஷனை முதலில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். பின்னர் அதில் 6 இலக்க யோனோ கேஷ் அடையாள எண்ணை உருவாக்க வேண்டும்.

பணம் எடுக்க வேண்டும் என்றால் யோனோ அப்ளிகேசன் மூலம் பதிவு செய்யப்பட்ட செல்லிடை பேசி நம்பருக்கு ஒரு எண் அனுப்பி வைக்கப்படும். பின்னர் ஏ.டி.எம்களில் யோனோ கேஷ் எண் மற்றும் பாஸ்வேர்டை எண்ணை பதிவு செய்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.

இந்த வசதியை நாடு முழுவதிலும் உள்ள 16,500 ஏ.டி.எம்.களில் தற்போது பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து ஏ.டி.எம்களிலும் இந்த வசதி கொண்டுவரப்படும் என பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் ரஜினீஸ் குமார் தெரிவித்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : sbi plans ban all atm cards completely block debit cards promote moneyless transactions பணமில்லா பரிவர்த்தனை ஏ.டி.எம். கார்டுகளை ரத்து ரஜினீஸ் குமார் பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர்

More from the section

ஏன் எனக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்கிறது?
சின்மயானந்தா சிறையில் அடைப்பு
எதிர்த்து கேள்வி கேட்டால் ஏறி மிதிப்பதா? மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஆவேசம்
கேள்விக்கே இடமில்லை, விராட் கோலி தான் கேப்டன்: ஆர்சிபி முடிவு!
வரிச்சலுகை அறிவிப்பு எதிரொலி: மும்பை பங்குச் சந்தை ஏற்றத்தில் வர்த்தகம்