வைகோ மருத்துவமனையில் அனுமதி: நியூட்ரினோ எதிர்ப்பு பிரசாரம் ஒத்திவைப்பு

மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ திடீர் உடல்நலக் குறைவால் மதுரை அப்பல்லோ மருத்துவமனையில்
வைகோ மருத்துவமனையில் அனுமதி: நியூட்ரினோ எதிர்ப்பு பிரசாரம் ஒத்திவைப்பு


மதுரை: மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ திடீர் உடல்நலக் குறைவால் மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

வைகோ, மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பின்னர் தேசிய அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். 

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவு நீக்கப்படும் என்றும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அதிகாரம் அளிக்கும் சட்டப்பிரிவு 35-ஏ பிரிவை  நீக்க உள்ளதாகவும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை, ஜம்மு காஷ்மீர், லடாக் என்று இரண்டாக பிரிப்பதாக மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார்.

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தததற்கு மாநிலங்களவையில் எதிர்ப்பு தெரித்து காஷ்மீரில் ஜனநாயகப் படுகொலையில் ஈடுப்பட்டு உள்ளது பாஜக. சிறப்பு அந்தஸ்தை நீக்கியதால் காஷ்மீர் தனது தனித்துவத்தை இழந்துவிட்டது. நேரு அளித்த வாக்குறுதியை மீறி உள்ளது. காஷ்மீருக்கு நாம் கொடுத்த சத்தியத்தை மீறி இருக்கிறோம். அப்பகுதி மக்களை நாம் ஏமாற்றி இருக்கிறோம். இதை பார்க்கும் போது என் இரத்தம் கொதிக்கிறது. இந்த மசோதா நகலை எரித்தாலும் நான் எதிர்க்கமாட்டேன்.

காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா கவுன்சில் தலையிடக் கூடும். காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப், சூட்சமமாக காய் நகர்த்துகிறார். சீனாவும், பாகிஸ்தானும் காஷ்மீரை மிகவும் நெருக்கமாக கவனித்து வருகிறது. நீங்கள் அவர்களுக்கு தேவையான விஷயங்களை எல்லாமே அப்படியே செய்து இருக்கிறீர்கள். இனி வெளிநாட்டு அழுத்தம் அதிகமாக காஷ்மீரில் இருக்கும். நீங்கள் அங்கு என்ன செய்வீர்கள். காஷ்மீர் இளைஞர்களை அங்கிருந்து தூக்கி எறிய முடியுமா?. அவர்கள் வாழ்ந்த பூமியை நாம் அவர்களிடம் இருந்து பறிக்க முயற்சி செய்கிறோம். இது பெரிய ஆபத்தில் முடிய போகிறது. இங்கு நடந்து இருப்பது ஜனநாயக கொலை... கொலை... கொலை மட்டும்தான் என்று மிக ஆவேசமாக பேசிய வைகோ, இந்த மசோதாவை எதிர்க்கிறேன். ஜனநாயகத்தில் நாம் வெட்கப்பட வேண்டிய நாள் இன்று என தனது கருத்தை ஆவேசமாகவும், அழுத்தமாகவும் பதிவு செய்த வைகோ பேசியது தேசத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.

காஷ்மீர் பிரச்னையில் வைகோ பேசியது தில்லி அரசியலையே குலுக்கியது.

தீவிர அரசியலிலும், நிறைய வழக்குகளில் ஆஜராகி வாதிடுவதாலும், பொது விழாக்களில் கலந்து கொள்வதாலும் அவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக ஓய்வின்றி நிறைய இடங்களுக்கு செல்வதால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், வைகோவுக்கு உடல்நல சோர்வு ஏற்பட்டதை அடுத்து இன்று மதுரை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். 

உடலில் ஏற்பட்ள்ள சிறு சிறு பிரச்னைகளை சரி செய்வதற்கும், ஆலோசனைகளை பெறுவதற்கும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

மருத்துவர்கள் ஆலோசனைப்படி வைகோ ஓய்வெடுக்க வேண்டியுள்ளதால், 20,21,22 ஆகிய தேதிகளில் தேனி மாவட்டத்தில் மேற்கொள்ள இருந்த நியூட்ரினோ எதிர்ப்பு பிரசாரம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com