தற்போதைய செய்திகள்

மீஞ்சூர் அருகே வெந்நீர் கொட்டியதில் சகோதரர்கள் 2 பேர் சாவு

18th Aug 2019 06:05 PM

ADVERTISEMENT


திருவள்ளூர்: மீஞ்சூர் அருகே காட்டூரில் வெந்நீர் கொட்டியதில் தீக்காயமடைந்த சகோதரர்கள் ஸ்ரீதர்சித்(4), ஜோசித்(2) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 

கடந்த 10 ஆம் தேதி வீட்டில் குளிப்பதற்காக வைத்திருந்த வெந்நீர் கவிழ்ந்ததால் ஸ்ரீதர்சித்(4), ஜோசித்(2) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். 

இதையடுத்து சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 

இதுகுறித்து மீஞ்சூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT