திங்கள்கிழமை 16 செப்டம்பர் 2019

அத்திவரதரை தரிசித்தார் நடிகர் ரஜினிகாந்த்!

DIN | Published: 14th August 2019 08:09 AM


நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதாவுடன் நேற்று நள்ளிரவு காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசனம் செய்தார். 

காஞ்சிபுரம்  வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் அத்திவரதர் பெருவிழா வரும் ஆகஸ்ட் 16-ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.விழாவின் 44 வது நாளான செவ்வாய்க்கிழமை அத்திவரதர் பச்சை நிறப்பட்டாடையும், சிவப்பு நிற அங்கவஸ்திரமும் அணிந்திருந்தார். அவரது உடல் முழுவதும் புஷ்ப அங்கியால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அத்திவரதருக்கென்றே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட மனோரஞ்சிதம், ஏலக்காய், மகிழம்பூ மாலைகளை அணிந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார் அத்திவரதர். பெருமாள் காட்சியளித்துக் கொண்டிருக்கும் வஸந்த மண்டபம் முழுவதும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டது பக்தர்களை வெகுவாக ஈர்த்தது.

காஞ்சிபுரம் அத்திவரதர் பெருவிழா வைபவம் நிறைவுபெற இன்னும் 2 நாள்கள் மட்டுமே உள்ளநிலையில், பக்தர்கள் கூட்டம் நாளுக்குநாள் அலைமோதுகிறது.

 இந்நிலையில், நேற்று நள்ளிரவு வரதராஜப்பெருமாள் கோவிலுக்கு வந்த ரஜினியைக் கண்டு, அங்கு கூடியிருந்த மக்கள் கையசைத்து ஆரவாரம் செய்தனர். அவரை வரவேற்ற அர்ச்சகர்கள், அத்திவரதரின் சிறப்புகளை விளக்கி கூறி சிறப்பு பூஜைகளை செய்தனர். அத்திவரதரை மனைவி லதாவுடன் தரிசித்தார் ரஜினிகாந்த். கோவில் நிர்வாகம் சார்பில் ரஜினிக்கு பூரண கும்ப மரியாதையும் பிரசாதங்களும் வழங்கப்பட்டன. அவரது சார்பில் சுவாமிக்கு பட்டாடை அணிவிக்கப்பட்டது.

தரிசனம் முடிந்து வெளியே வந்த ரஜினிகாந்த் பக்தர்களை பார்த்து உற்சாகமாக கையசைத்தார். 

ரஜினிகாந்த் வருகையையொட்டி நள்ளிரவு நேரத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

Rajnikanth offered prayers at the Sri Devarajaswami temple, early morning today, in Kanchipuram as the idol of Lord Athi Varadar is turned to standing position. The idol is taken out once in 40 years from the temple pond.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : Rajinikanth ரஜினிகாந்த் காஞ்சிபுரம் நடிகர் ரஜினிகாந்த் Athivaradar அத்திவரதர் தரிசனம் அத்திவரதர் பெருவிழா Kanchipuram Sri Devarajaswami temple Rajnikanth Lord Athi Varadar

More from the section

குரூப்-4 தேர்வில் மாற்றம் தேவை!
தமிழகத்தில் தீ விபத்துகளின் எண்ணிக்கை 7.41% அதிகரிப்பு
மந்தகதியில் டெல்டா மாவட்ட ரயில்வே திட்டங்கள்
ஆவின் பால் பொருள்கள் விலை உயர்வு: செப்.18 முதல் அமல்
ஹரியாணாவில் என்ஆர்சி பட்டியல் அமல்படுத்தப்படும்: முதல்வர் கட்டர்