வெள்ளிக்கிழமை 20 செப்டம்பர் 2019

வேலூர் தொகுதியை கைப்பற்றுகிறது திமுக: கதிர் ஆனந்த் 8,460 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

DIN | Published: 09th August 2019 02:10 PMவேலூர் மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை விட, திமுக  வேட்பாளர் கதிர் ஆனந்த் 8,460 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்து வருகிறார்.  

வேலூர் மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு கடந்த 5 ஆம் தேதி நடந்தது. அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி உள்பட 28 பேர் போட்டியிட்டனர்.

தேர்தலின்போது, தொகுதி முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 1,553 வாக்குச்சாவடிகளில், தொகுதியில் மொத்தமுள்ள 14 லட்சத்து 32 ஆயிரத்து 555 வாக்காளர்களில் 10 லட்சத்து 24 ஆயிரத்து 352 பேர் தங்களது வாக்கை பதிவு செய்திருந்தனர். மேலும், ராணுவத்தில் பணியாற்றும் இந்தத் தொகுதியைச் சேர்ந்த 6,088 பேருக்கு மின்னணு தபால் வாக்குகளும், 1,026 போலீஸாருக்கு தபால் வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன. 

வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி அருகே உள்ள ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் இன்று காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணிக்கை தொடங்கி முன்னிலை நிலவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 

நொடிக்கு.. நொடி மாறும் வாக்கு எண்ணிக்கை நிலவரத்தால் வேட்பாளர்கள் முதல் கட்சிகளின் தொடர்கள் வரை மாறி மாறி ஏமாற்றங்கள் காணப்பட்டுள்ளது. 

இன்னும் 12 ஆயிரம் வாக்குகளே எண்ணப்பட நிலையில், பரபரப்பான எதிர்பார்ப்புகள் நிலவி வரும் நிலையில், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 4,76,194 வாக்குகள் பெற்று 8,460 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகத்தை பின்னுக்கு தள்ளியுள்ளார். ஏ.சி. சண்முகம் 4,67,006 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் இருந்து வருகிறார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 26,320 வாக்குகள் மூன்றாம் இடத்தை தொடர்கிறார். 

திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை பெற்று வரும் சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகம் தொண்டர்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகளை வெடித்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : Vellore Election Result 2019 LIVE Vellore Election Result 2019 Vellore Lok Sabha election result live updates vellore election

More from the section

கேள்விக்கே இடமில்லை, விராட் கோலி தான் கேப்டன்: ஆர்சிபி முடிவு!
வரிச்சலுகை அறிவிப்பு எதிரொலி: மும்பை பங்குச் சந்தை ஏற்றத்தில் வர்த்தகம்
கார்ப்பரேட் வரியைக் குறைத்து நிர்மலா சீதாராமன் அறிவிப்பு: பங்குச் சந்தைகளில் அதிரடி உயர்வு
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தேனி தனிப்படை போலீஸார் விசாரணை
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: தேசிய தேர்வு முகமைதான் பதிலளிக்க வேண்டும் - அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி