காஷ்மீரில் கூடுதல் வீரர்கள் குவிப்பு: ஆளுநர் விளக்கம் 

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பை மேம்படுத்தவே கூடுதல் துணை ராணுவப் படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதாகவும், அரசியல் சட்டத்தில் எந்த
காஷ்மீரில் கூடுதல் வீரர்கள் குவிப்பு: ஆளுநர் விளக்கம் 



ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பை மேம்படுத்தவே கூடுதல் துணை ராணுவப் படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதாகவும், அரசியல் சட்டத்தில் எந்த மாற்றங்களும் செய்யப்படுவதாக தகவல் எதுவும் இல்லை ஆளுநர் சத்தியபால் மாலிக் விளக்கம் அளித்துள்ளார். 

பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்-இ-முஹம்மத் தீவிரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாரின் அண்ணன் இப்ராஹிம் அசார், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முசாஃபராபாத்தில் அண்மையில் காணப்பட்டுள்ளான்.

1999 ஆம் ஆண்டில் நடைபெற்ற காந்தஹார் விமான கடத்தலுக்கு மூளையாகச் செயல்பட்ட இவனது மகன் உஸ்மான் ஹைதர், ஜம்மு-காஷ்மீருக்குள் ஊடுருவியபோது, கடந்த ஆண்டு அக்டோபரில் புல்வாமா மாவட்டத்தில் இவனை பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டான், இதேபோல மசூத் அசாரின் மைத்துனர் மகனான தல்ஹா ரஷீத் 2017 ஆம் ஆண்டில் புல்வாமா மாவட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்டான்.

இதற்கு பழிவாங்கும் வகையில், காஷ்மீருக்குள் ஊடுருவி இந்திய நிலைகளை தாக்க திட்டமிட்டுள்ளான். இந்திய படைகளுடன் போரிட்டு மடிய விரும்புவதாக இப்ராஹிம் அசார் கூறியதை, தீவிரவாதிகளின் தகவல் பரிமாற்றத்தை இடைமறித்து உளவுத்துறையினர் கேட்டுள்ளனர். 

மேலும், இயக்கத் தீவிரவாதிகளை பயிற்றுவித்து, எல்லைத் தாக்குதல் குழுக்களை உருவாக்கி, கட்டுப்பாட்டு கோட்டருகே பாகிஸ்தான் ராணுவ நிலைகளில் பதுங்கச் செய்திருப்பதாகவும் உளவுத் தகவல்கள் கிடைத்துள்ளன.

ஆயுதந்தாங்கிய தீவிரவாதிகளை காஷ்மீருக்குள் ஊடுருவச் செய்து, காஷ்மீர் பள்ளத்தாக்கில் தற்கொலைத் தாக்குதல்களை நிகழ்த்த திட்டமிட்டுள்ளதாகவும், ஹிஸ்புல் முஜாகிதீன் என்ற தீவிரவாத அமைப்பும் இந்த தாக்குதலில் ஒருங்கிணைந்து செயல்பட உள்ளதாகவும் உளவுத் துறையிடம் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

குறிப்பாக, அமர்நாத் யாத்ரீகர்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அதனால் காஷ்மீர் பள்ளத்தாக்கில் தங்கியிருக்கும் யாத்ரீகர்கள் தங்களது பயணத்தை விரைவில் முடித்துக் கொண்டு சொந்த ஊர்களுக்கு திரும்புமாறும், சுற்றுலாப் பயணிகள் அனைவரும் தங்களது பயணத்தை முடித்துக் கொண்டு, ஊர் திரும்புவதற்கான நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ளுமாறு நேற்று வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. 

இதனைத்தொடர்ந்து பாதுகாப்புப படை வீரர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுபத்தப்பட்டு வருகிறது. 

இதனிடையே அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்களின் பாதையில் பாகிஸ்தான் ராணுவ முத்திரை பதித்த  கண்ணி வெடியும் தூரத்தில் இருந்து குறிபார்த்து சுடும் எம்24 ரக ஸ்நைப்பர் துப்பாக்கியும்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தற்கொலைத் தாக்குதல்களை நிகழ்த்துவது, ஆங்காங்கே குண்டுகளை வைப்பது, உயிர்சேதங்களை நிகழ்த்தி வன்முறைகளை தூண்டுவது என தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்தது குறித்த உளவுத்துறை தகவல்கள் உறுதிப்படுத்தியதன் அடிப்படையிலேயே அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இதைத்தொடர்ந்து ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பை மேம்படுத்தவே கூடுதல் துணை ராணுவப் படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதாகவும், அரசியல் சட்டத்தில் எந்த மாற்றங்களும் செய்யப்படுவதாக தகவல் எதுவும் இல்லை ஆளுநர் சத்தியபால் மாலிக் விளக்கம் அளித்துள்ளார். 

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநில முக்கிய அரசியல் தலைவர்கள், தேசிய மாநாட்டு கட்சியின் துணைத்தலைவர் ஒமர் அப்துல்லா தலைமையில் இன்று ஆளுநர் சத்தியபால் மாலிக்கை சந்தித்தனர்.

இந்தநிலையில் ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், தீவிரவாதிகள் தற்போது அமர்நாத் புனித யாத்திரையிலும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாவும், இதுமட்டுமின்றி எல்லையிலும் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இதையடுத்து காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

சதிச்செயல்களை முறியடிப்பதில் வீரர்கள் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காகவும், அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாகவே அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கத்திலேயே கூடுதல் துணை ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், வீரர்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற பல விஷயங்கள் உள்ளன. அவை அனைத்தையும் பொதுவெளியில் தெரிவிக்க முடியாது. அரசியல் சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்படுவதாக எந்தவித தகவலும் இல்லை. பாதுகாப்பு காரணங்களுக்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளை மற்ற விவகாரங்களுடன் இணைத்து தேவையற்ற முறையில் வீண் பதற்றத்தை ஏற்படுத்த வேண்டாம். இதுபோன்ற பல விஷயங்கள் உள்ளன. அவை அனைத்தையும் பொதுவெளியில் தெரிவிக்க முடியாது. 

தீவிரவாத தாக்குதலை முறியடிக்கும் அவசியம் அரசுக்கு உள்ளது. அதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com