13. தாங்கவே முடியாத முதுகு வலியால் தவிக்கிறீர்களா?

பிசியோதெரபி சிகிச்சை முறைகள் மற்றும் பயன்கள்
13. தாங்கவே முடியாத முதுகு வலியால் தவிக்கிறீர்களா?

இக்கட்டுரையில், 'பிசியோதெரபி' என்றால் என்ன, அதன் மூலம் எவ்வகையான வலிகள் குணப்படுத்தப்படும், பிஸியோதெரபி மருத்துவ சிகிச்சை முறைகள் (Treatment methods) என்னென்ன என்பதையும் பார்க்கப் போகிறோம். பிசியோதெரபி என்றால் 'இயன்முறை மற்றும் உடற்பயிற்சி மருத்துவம்' எனப் பொருள். அதாவது எப்படியான வலிகளையும் இயற்கை முறையாலும், உடற்பயிற்சிகளாலும் குணப்படுத்துவதே பிசியோதெரபி ஆகும். ஆங்கிலத்தில் பிசியோதெரபி என்றால் 'Healing through Hands' என்பார்கள். அதாவது வலிகளை உங்கள் கைகளின் மூலம் குணப்படுத்துதல். பிஸியோதெரபிஸ்ட்கள் 'Magical Hands' உடையவர்கள் எனக் கூறுவார்கள். அதாவது அவர்களது கைகள் 'அற்புதங்கள்' செய்யும். 

மேலை நாடுகளில் பிஸியோதெரபிஸ்ட்கள் உபயோகிக்கும் நுணுக்கங்கள், சிகிச்சை முறைகள் எல்லாம் மிக மிக மேம்பட்ட முறைகளாகும். ஆனால் நம் நாட்டைப் பொறுத்தவரை 'பிசியோதெரபி' என்பது 'கரண்ட்' வைத்தல் என எல்லோரும் அறியும்படி செய்திருக்கிறார்கள். இவ்வகையான கரண்ட் வைத்தல் எல்லாம் மேலை நாடுகளில் தடை செய்யப்பட்டு நிறைய வருடங்கள் ஆகின்றன. நீங்கள் நினைக்கலாம் நான் நமது படிப்பு முறைகளை குறை கூறுகிறேன் என்று. ஆனால் நான் மேலை நாடுகளில் படித்த பிறகே இந்தத் தெளிவு ஏற்பட்டது. நான் இந்தத் துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். நான் இந்த கரண்ட் முறைகளை உபயோகித்து 15 வருடங்கள் ஆகின்றன. இதை நான் பெருமைக்காக கூறவில்லை. இது என் ஆதங்கம். நான் என்னென்ன மருத்துவ முறைகளை பின்பற்றுகிறேன் மற்றும் பிஸியோதெரபியில் என்னென்ன வகைகள் உள்ளன என்பதைப் பாப்போம்.

மேம்பட்ட 'பிசியோதெரபி’ சிகிச்சை முறைகள் (Advanced "பிசியோதெரபி" Treatment Techniques):

➜ Manual Therapy
➜ Mobility Glides Therapy
➜ Manipulation Techniques (Back, Neck, Knee, Shoulder and Extremities)
➜ Taping Therapy
➜ Trigger point release Therapy
➜ Dry needling Therapy 
➜ Exercise Therapy
➜ Medical Strengthening & Conditioning Therapy

இவை எல்லாம் 'பிஸியோதெரபிகளில்’ உள்ள மேம்பட்ட நுணுக்க மற்றும் மருத்துவ முறைகள். இவை எல்லாம் கற்பிக்கப்பட வேண்டும் மற்றும் பிஸியோதெரபிஸ்ட்களும் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதே எனது ஆதங்கம். இவ்வகையான சிகிச்சை முறைகள் எந்தெந்த வலிகளுக்கெல்லாம் உபயோகிக்கலாம் என்பதையும் இடத்தொடரில் பார்க்கப் போகிறோம். இப்போது 'பிசியோதெரபி வகைகள்’ என்னென்ன என்பதைப் பாப்போம்.
பிசியோதெரபி வகைகள்:

➜ தசைக்கூட்டு பிசியோதெரபி (Musculosketal Physiotherapy)
➜ ஸ்போர்ட்ஸ் பிசியோதெரபி  (Sports Physiotherapy)
➜ நரம்பியல் பிசியோதெரபி  (Neuro Physiotherapy)
➜ குழந்தைகள் சம்பத்தப்பட்ட பிசியோதெரபி (Paediatric Physiotherapy)
➜ இருதய பிசியோதெரபி (Cardio Physiotherapy)

இவையெல்லாம் பிஸியோதெரபியில் உள்ள வகைகள். இவை எல்லாம் உங்களுக்கு கற்பிக்கப்படும். ஆனால், இதில் எதாவது ஒரு துறையை எடுத்து அதில் சிறப்புப் பயிற்சி பெறுவது நல்லது. இத்தொடரில் நாம் தசைக்கூட்டு மற்றும் ஸ்போர்ட்ஸ் பிசியோதெரபி (Musculoskeletal மற்றும் Sports Physiotherapy) மூலம் என்னென்ன வலிகளை தீர்க்கலாம் என்பதை பார்க்கப் போகிறோம். இத்தொடரில் முதலாக, நாம் முதுகு வலி (Back pain) பற்றி பார்க்கப் போகின்றோம். முதுகு வலிக்கான காரணங்கள், வாழ்க்கை முறை பாதிப்புகள், உடற்பயிற்சிகள், சிகிச்சை முறைகள் ஆகியவற்றை நாம் இங்கு விரிவாகப் பார்க்கப் போகிறோம். 

முதுகு வலி என்பது இப்போது மிகவும் பொதுவான ஒரு வலியாக மாறிக் கொண்டிருக்கிறது. நம்மில் 10ல் 7 பேருக்கு முதுகு வலி இருக்கின்றது என ஆராய்ச்சிகள் கூறுகின்றன. உண்மையைச் சொல்ல போனால் முதுகு வலி இந்நாட்களில் இளம் சிறார்களுக்கும் வருகிறது. முதுகு வலி என்பது இப்போது 10 வயதுக்காரர்கள் முதல் 90 வயதுக்காரர்கள் வரை அனைவருக்கும் வருகிறது. அமெரிக்காவில், முதுகு வலியால் ஆண்டுதோறும் பல மில்லியன் டாலர்கள் வருவாய் இழப்பு ஏற்படுவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றது. இந்தியாவிலும் இதே நிலைமைதான், ஏனெனில் இன்று எல்லாம் கணினிமயம் மற்றும் செல்பேசிமயம். ஆம், 30 வருடங்களுக்கு முதுகு வலி என்றால் என்ன என்று கேட்ட நாம், தற்போது நம்மிடம் இருக்கும் நல்ல முதுகையும் கணினி, செல்பேசிகளை அளவற்ற நேரத்திற்கு உபயோகித்து வீணாக்கிக் கொண்டிருக்கிறோம். ஏனென்றால் இவைகள் நம்மை மிக நீண்ட நேரத்திற்கு அதன் முன் உட்காரச் செய்கின்றன.

90% முதுகு வலிகள், மிக நீண்ட நேரம் உட்காருவதாலேயே வருகின்றது என ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அதாவது நாம் நகருவதை விட ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்வதை அதிகம் செய்கிறோம். அதாவது இன்றைய தேதியில் 'Sitting is the new Smoking' என்றாகியுள்ளது. நீங்கள் நீண்ட நேரம் உட்கார்ந்து செய்து கொண்டிருக்கும் வேலைகள், வாழ்க்கை முறை வகையில் 'சிகரெட்' புகைப்பதற்குச் சமம். சிகிரெட்டால் என்னென்ன விபரீதங்கள் ஏற்படுமோ, அதே விபரீதங்கள் நீண்ட நேரம் உட்காருவதாலும் ஏற்படும் என ஆராய்ச்சிகள் கூறுகின்றது. பொதுவாக முதுகு வலிகள் இரண்டு வகைப்படும். அவை என்னென்ன என்பதை பாப்போம்.

➜ குறிப்பிட்ட காரணங்களால் வரும் முதுகு வலி (Specific Lower Back pain)
➜ குறிப்பிட்ட காரணமில்லாமல் வரும் முதுகு வலி (Non-specific Lower Back pain)

இவ்வகையான முதுகு வலிகள் என்ன காரணங்கள், இதை எப்படி குணப்படுத்தலாம், இதில் என்னென்ன கிளை வகைகள் உள்ளன, இதற்கான சிகிச்சை முறைகள் என்னென்ன இத்தொடரில் வரும் வாரங்களில் பாப்போம்.

தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com