7. ‘பும்ரா’ வீசிய பந்து!

காயங்கள் என்பது விளையாட்டில் தவிர்க்க முடியாத ஒன்று. இது ஒரு விளையாட்டு வீரரின் வாழ்வில் ஒரு அங்கம்.
7. ‘பும்ரா’ வீசிய பந்து!

விளையாட்டினால் வரும் காயங்கள்:

காயங்கள் என்பது விளையாட்டில் தவிர்க்க முடியாத ஒன்று. இது ஒரு விளையாட்டு வீரரின் வாழ்வில் ஒரு அங்கம். நீங்கள் கேட்கலாம், ஏன் காயங்கள் வருகிறது என்று. ஆனால், எவ்வளவு உடலுறுதியுடன் இருந்தாலும், காயங்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. இதுவே விளையாட்டின் சிறப்பம்சமாகும்.

உங்களுக்கு ‘காயம்’ ஏற்படும் எனத் தெரிந்தும், அதன் மீது கொண்டுள்ள தீராத ஈர்ப்பே உங்களை ஒரு சிறந்த விளையாட்டு வீரராக்கும். கடந்த வாரம், நடந்து முடிந்த கிரிக்கெட் உலகக் கோப்பையில், நம் தமிழகத்தைச் சேர்ந்த ‘விஜய் ஷங்கர்’ சில போட்டிகளில் மட்டுமே விளையாடினார். ஏனெனில், அவர் பயிற்சியில் இருக்கும் போது, பந்து வீச்சாளர் ‘பும்ரா’ வீசிய பந்து அவரது கால் கட்டை விரலை பதம் பார்த்தது. இதனால் அவர் உலகக் கோப்பையிலிருந்தே விலக நேர்ந்தது. அவர் எவ்வளவு மனமுடைந்திருப்பார். இந்த காயம் ஏற்பட்டது பந்து வீசிப்பட்டதால்தான், விஜய் ஷங்கரின் தவறு இதில் எதுவுமில்லை. நான் மேலே கூறியது போல், இது போன்ற காயங்கள், சிந்தனைகளை எல்லாம் தாண்டி, நீங்கள் ஒரு விளையாட்டு வீரராக, அதன் மேல் வற்றாத ஈர்ப்பு இருக்க வேண்டும். இப்போது விளையாட்டில் காயங்கள் எப்படி ஏற்படுகிறது, அதற்கான தீர்வுகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

➜ தசைகளின் ஏற்றத்தாழ்வு (Muscular Imbalance)

➜ தொடர்பு விளையாட்டுக்கள் (Contact Sports)

➜ பயிற்சிகளினால் வரூஉம் காயங்கள்

➜ ஊட்டச்சத்து குறைவினால் வரும் காயங்கள்

தசைகளின் ஏற்றத்தாழ்வு (Muscular Imbalance):

இதுவே ஒரு விளையாட்டு வீரருக்கு வரும் காயங்களுக்கு, முதன்மையான காரணம். ஏனெனில், கடந்த வாரங்களில் கூறியதைப் போல, நாம் உடல் வலிமைப் பயிற்சிகள் தாமதமாவதால். நம் உடலின் வலிமை, விளையாட்டின் தீவிரம் (Intensity), அதற்கான பயிற்சிகளின் தீவிரத்திற்க்கு ஈடு கொடுக்க முடியாததால் ’காயங்கள்’ ஏற்படுகிறது. இது மட்டுமில்லாமல்,நம் உடலில் சில தசைகள், சிலருக்கு இயற்கையாகவே பலவீனமாக இருக்கும். இப்படி இருக்கும் தசைகளால், மற்ற தசைகளின் மீதான அழுத்தம் கூடும். ஏனெனில், வலுவான தசைகள், இப்படிப்பட்ட தசைகளுக்காகவும் வேலை செய்யும். ஆனால் இது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே சாத்தியம்.அதனால், வலுவான தசைகளும் ,வலுவிழந்து ‘காயங்கள்’ ஏற்பட ஆரம்பிக்கும். ஆகவே, உங்கள் உடலில் என்னென்னெ பலவீனமான தசைகள் உள்ளன எனக் கண்டுபிடித்து, அதை வலுப்பெற செய்தால், காயங்கள் குறையும்.

தசைகள் எல்லாம், மற்ற உடல் பாகங்களைப் போல்தான், நம் உடல் பாகங்களில் ஆற்றல் குறைந்தால், நாம் உணவு உண்பதன் மூல ஆற்றல் கிடைக்கிறது. தசைகளுக்கு 'Exercise' என்பதே உணவு. நாம் 'Exercise' செய்யாமல், வெறும் விளையாட்டை மட்டும் விளையாடினால், தசைகளில் உள்ள ‘ஆற்றல்’ எல்லாம் செலவிடப்படும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு உங்கள் தசைகளில் உள்ள ஆற்றல் எல்லாம் செலவிடப்பட்டு விடும். இதனால்,நீங்கள் ‘காயமடைய’ வாய்ப்புகள் அதிகம்.

விளையாட்டில் காயமடைய மேற்கூறிய காரணங்கள் எல்லாம் முதன்மையானவை. இவை எல்லாம் என்ன மற்றும் எப்படி தடுப்பது என்பதை நீங்கள் விளையாட ஆரம்பிக்குமுன் ‘Sports Medicine specialist’- டிடம் ஆலோசனைப் பெற்று, தசைகளை வலுப்பெற செய்வதால் ‘காயங்கள்’ ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

தொடர்பு விளையாட்டுக்கள் (Contact Sports):

தொடர்பு விளையாட்டுக்கள், இவ்வகையான விளையாட்டுகளால் ‘காயம்’ என்பது தவிர்க்க முடியாத ஒன்று. இது போன்ற போட்டிகளினால் எலும்பு முறிவு, Ligament காயங்கள், Contusion போன்ற காயங்கள் ஏற்படலாம். உதாரணமாக, கால்பந்து, ஹாக்கி, ரக்பி, கிரிக்கெட் போன்ற போட்டிகள்.இதில் கூறிய முதல் மூன்று போட்டிகள் நேரடியான தொடர்பு விளையாட்டுக்கள். கிரிக்கெட்,ஒரு மறைமுகமான தொடர்பு விளையாட்டு. ஏனெனில், கிரிக்கெட்டில் பந்தினால் அடிபடலாம். இன்னும் சொல்லப் போனால், Phil Hughes எனும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர், ஒரு ஆட்டத்தின்போது தலையில் ‘பந்து’ பட்டதால் இறந்து விட்டார். ஆம், இதெல்லாம் கூட ஏற்படக்கூடும். நீங்கள் எவ்வளவு பாதுகாப்பாக இருந்தாலும், காயங்கள் ஏற்படலாம். இதனாலேயே, நான் தொடக்கத்தில் கூறியது போல் விளையாட்டில் ‘காயங்கள்’ என்பது தவிர்க்க முடியாத ஒன்று. எனினும், நீங்கள் பாதுகாப்பு உபகரணங்கள் உபயோகித்தால், காயங்களின் தீவிரம் குறைய வாய்ப்பிருக்கின்றது.

பயிற்சிகளினால் வரும் காயங்கள்:

மேலே கூறியது போல், பயிற்சிகளினாலும் ‘காயங்கள்’ ஏற்படும். ஏனெனில், பயிற்சிகள் மற்றும் பயிற்சி ஆட்டங்கள் என்பது, நீங்கள் ஒரு போட்டியில் எப்படி விளையாட்டுப் போகிறீர்கள் என்பதற்கு ஒத்திகை பார்ப்பது. அதனால், பயிற்சி ஆட்டத்தின் தீவிரமும் (Intensity)  போட்டியை போல் இருக்கும்.எனவே,இதனால் ‘காயங்கள்’ ஏற்படும். ஏனெனில், பாதுகாப்பு உபகரணங்கள் சரியாக உபயோகிக்காமல் போவதால்தான். எனவே, பயிற்சி ஆட்டங்களில் போதும், அனைத்து பாதுகாப்பு உபகரணங்களையும் உபயோகித்தால் காயங்களை தவிர்க்கலாம்.

ஊட்டச்சத்து குறைவால் ஏற்படும் காயங்கள்:

இவ்வகைக் காயங்களும், மிகவும் பொதுவான ஒன்று. ஏனெனில், மேலே கூறியது போல், தசைகளுக்கு ஆற்றல் என்பது மிக முக்கியம். அது பயிற்சிகள் மூலமும், உணவின் மூலமும் வரும். எடுத்துக்காட்டாக, விளையாட்டு வீரருக்கு ‘புரதச்சத்து’ என்பது மிக முக்கியம். இது குறைவாக இருந்தால், தசைகள் வலுவிழக்கும். ஏனெனில் புரதம் என்பது உங்கள் தசைகளுக்கு வடிவம், ஆற்றல் கொடுப்பவை. அதேபோல், பயிற்சிகளின் மூலமும், உடலில் உள்ள புரதம் மற்றும் Mineral களும் செலவிடப்படும். எனவே, நாம் எவ்வளவு செலவிடுகிறோமோ, அதே அளவு ‘புரதம்’ உண்ண வேண்டும். இல்லையெனில் குறைபாடு ஏற்பட்டு ‘காயங்கள்’ அடைய வாய்ப்புகள் அதிகம். இது மட்டுமில்லாமல், விளையாட்டு திறனை அதிகரிக்கும் உணவுகளும் உள்ளன. அவை என்னென்ன மற்றும் எவ்வளவு உண்பது என்பதை ஆலேசனை பெற்று உண்பதாலும் காயங்களைத் தவிர்க்கலாம்.

இப்போது, காயங்கள் ஏற்பட்ட பின் அதை எப்படி குணப்படுத்தலாம் என்பதை பாப்போம். ஒரு விளையாட்டு வீரர் காயமடைந்த பின், Sports Medicine டாக்டரிடம் சென்று, அந்த காயம் எவ்வளவு தீவிரமானது, அது குணமடைய எவ்வகையான மருத்துவம் செய்ய வேண்டும் என்ற ஆலோசனையைப் பெற வேண்டும். விளையாட்டினால் ஏற்படும் காயங்களை குணப்படுத்த என்னென்ன வழிகள் உள்ளன என்பதை பாப்போம்.

➜ Conservative மருத்துவம்

➜ அறுவை சிகிச்சை மருத்துவம்

Conservative மருத்துவம்:

இவ்வகை மருத்துவம், மருந்துகள் மற்றும் ‘exercise’ கள் மூலம் காயத்தைக் குணமடைய செய்யும் முறை.இதில் ‘Exercise’ என்பது ஒரு காயத்தைக் குணமடைய செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு வேளை, உங்கள் காயத்திற்கு அறுவை சிகிச்சை தான் செய்ய வேண்டுமானாலும், அதற்கு முன்பு ‘Exercise’ செய்வது முக்கியமாகும். எனவே இவ்வகை மருத்துவத்தால் உங்கள் காயம் குணமடையவில்லை என்ற பட்சத்தில் மட்டுமே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.

அறுவை சிகிச்சை மருத்துவம்:

சில காயங்கள் ‘அறுவை சிகிச்சை‘ மூலமே குணப்படுத்த முடியும். அதேபோல், எப்படிபட்ட காயம் என்பதை ஆராய்ந்து அறுவை சிகிச்சை செய்வதன் மூலம், உங்கள் காயம் விரைவில் குணமடைய வாய்ப்புள்ளது. எனினும் அறுவை சிகிச்சை முடிந்த பின் ‘Exercise’ செய்வது மிக முக்கியம்.

காயத்திலிருந்து விளையாட்டுக்கு திரும்புதல்:

காயம் அடைந்து, அதிலிருந்து குணமடைந்த பின், விளையாட்டுக்கு திரும்புவது என்பது மிக மிக முக்கியமானது. ஏனெனில், தேவையான அளவு கால இடைவெளி கொடுக்காவிட்டால், மறுபடியும் ‘காயம்" ஏற்பட வாய்ப்புகள் அதிகம். எனவே காயம் முழுமையாக குணமடைந்த பின்னர், எப்போது விளையாட்டுக்குத் திரும்பலாம் என்ற ஆலோசனையைப் பெற்று அதன்படி நடப்பது நல்லது.

பாதுகாப்பு உபகரணங்கள்:

பாதுகாப்பு உபகரணங்கள் ஒவ்வொரு விளையாட்டிற்கும் மிக முக்கியம். இவைகளை அணிவதால் காயங்கள் குறைய வாய்ப்புகள் உள்ளது. எனவே விளையாடும் போதும், பயிற்சியின் போதும் இவைகளை அணிந்து கொள்வது மிக முக்கியம்.

மேலே கூறியது போல், ‘காயங்கள்’ என்பது ஒவ்வொரு விளையாட்டின் அங்கமாகும். ஆனால், காயங்களிலிருந்து விடுபட்டு, மறுபடியும் எப்படி விளையாட்டிற்கு திரும்புகிறோம் என்பதே இங்கு முக்கியம்.

தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com