12. விளையாட்டிற்குப் பிறகான வாழ்க்கை:

நாம் கடந்த வாரங்களில் பார்த்ததை போல், ஒரு விளையாட்டு வீரரின் விளையாட்டுக் காலம் என்பது சராசரியாக 10-12 வருடங்கள் மட்டுமே
12. விளையாட்டிற்குப் பிறகான வாழ்க்கை:

நாம் கடந்த வாரங்களில் பார்த்ததை போல், ஒரு விளையாட்டு வீரரின் விளையாட்டுக் காலம் என்பது சராசரியாக 10-12 வருடங்கள் மட்டுமே. அதற்குப் பிறகான வாழ்க்கை, அவர் இந்த இடைப்பட்ட காலத்தில் எப்படி செயல்படுகிறார் என்பதை பொறுத்தே உள்ளது. மிகப் பெரிய ஜாம்பவான்கள் கூட விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு காணாமல் போயிருக்கிறார்கள்.  காரணம் அவர்களின் விளையாட்டு காலங்களில் ஓய்வுக்குப் பிறகான திட்டமிடலை (Planning) சரிவர செய்யாததாலே. ஆம், உங்களின் விளையாட்டு வாழ்க்கை எப்போது முடியும் என யாராலும் கணிக்க முடியாது. எனவே, அதற்கான திட்டமிடல்கள், முதலீடுகள் அனைத்தும் நீங்கள் விளையாடிக் கொண்டிருக்கும்போதே செய்தல் மிக மிக அவசியம்.

உதாரணமாக, நம் தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இன்றும் உலக அளவில் ஒரு மிகச் சிறந்த சுழற்பந்து (Spin) வீச்சாளர். ஆனால், அவர் உலகக் கோப்பை அணியிலும் விளையாடவில்லை, அதைத் தொடர்ந்து நடைபெறும் போட்டிகளிலும் அவர் இடம் பெறவில்லை. எனவே, உங்களின் எதிர்காலத்தை நீங்கள் விரைவில் தீர்மானிக்க வேண்டும். இப்போது விளையாட்டிற்குப் பிறகான வாழ்க்கையில் எவ்வகையான மாற்றங்கள் ஏற்படும், அவ்வாழ்க்கையை எப்படி எதிர்கொள்வது என்பதை இப்போது பாப்போம்.

➜ உடல் ரீதியான மாற்றம்
➜ விளையாட்டுக்குப் பிறகான வாழ்க்கை/தொழில்கள்

உடல் ரீதியான மாற்றங்கள்:

நீங்கள் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, முதலில் உங்கள் உடலில்தான் நிறைய மாற்றங்கள் ஏற்படும். ஏனெனில், நீங்கள் முன்பு போல் உடற்பயிற்சிகளோ, விளையாடுவது நின்றுவிடும். இப்படி இருந்தால், உங்கள் உடலின் பருமன் அதிகரித்து அது நிறைய உடல் மாற்றங்களுக்கு வழிவகுக்கும். ஒரு விளையாட்டு வீரர் எப்போதுமே உடற்பயிற்சிகளையும், விளையாட்டுகளையும் ஏதோவொரு வகையில் தொடர வேண்டும். இல்லையெனில், உங்கள் தசைகளில் மாற்றம் ஏற்பட்டு, அதிகக் கொழுப்புகள் தசைகளில் நிரப்பப்படும். இதனால் உங்கள் உடலின் பருமன் அடையும்.  இதனால் உங்களுக்கு நிறைய உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புகள் மிக அதிகம். இதைத் தவிர்க்கவே நீங்கள் உடற்பயிற்சிகளையும், விளையாட்டுகளையும் தொடர வேண்டும். சில விளையாட்டு வீரர்கள் ஓய்வுக்குப் பிறகு மற்ற விளையாட்டுகளையும் விளையாட ஆரம்பிப்பார்கள். விருப்பமான ஏதாவது ஒரு விளையாட்டை நீங்கள் தொடர்ந்து விளையாடினால், உங்கள் உடலுக்கும், மனதிற்கும் மிகவும் நல்லது.

விளையாட்டிற்குப் பிறகான வாழ்க்கை:

நான் மேலே கூறியது போல், நீங்கள் விளையாட்டிலுருந்து ஓய்வு பெற்ற பின்பு என்ன செய்யப்போகிறீர்கள் என்பதை நீங்கள் விளையாடிக் கொண்டிரும்போதே முடிவு செய்தல் அவசியம். சொல்லப் போனால் நீங்கள் தேர்வு செய்ய உங்களுக்கு நிறைய தொழில்கள் உள்ளன. பலர் பயிற்சியாளர் (Coach) ஆவதை விரும்புவார்கள். சிலர் வர்ணனை (Commentry) செய்ய விரும்புவார்கள். சிலர் விளையாட்டுக்கு கட்டமைப்புடன் இணைந்து வேலை செய்ய விரும்புவார்கள், சிலர் விளையாட்டு சார்ந்த தொழில்களை செய்ய முற்படுவார்கள்.

எடுத்துக்காட்டாக, ராகுல் டிராவிட் அவர்கள் இந்திய கிரிக்கெட்டின் இளம் திறமைசாலிகளை கண்டு அறியும் வேலையில் இருக்கிறார். அவர் U-19 எனப்படும் 19 வயது கீழுள்ள கிரிக்கெட் வீரர்களை அடையாளம் காண்பதிலும், அவர்களுக்கு பயிற்சி கொடுத்து அடுத்த கட்டத்துக்கு தயார் செய்யும் குழுவின் தலைவராக இருக்கிறார். அவர் இதற்கு ஒரு விளக்கமும் கொடுத்துள்ளார். அது என்னவென்றால் இவ்வயதில் திறமையைக் கண்டறிந்தாலே, அத்திறமையைக் கூர் தீட்ட முடியும் எனக் கூறினார். இது முழுக்க முழுக்க உண்மை. இப்போது நம் இந்திய அணியில் விளையாடும் அனைத்து இளம் வீரர்களும் இவரின் கண்டுபிடிப்பே. இதற்கான சிறப்பு விருதையும் இவர் பெற்றிருக்கிறார். எனவே உங்கள் ஓய்வுக்குப் பிறகு நீங்கள் செய்யக் கூடிய தொழில்கள் நிறைய உள்ளன. அதை என்ன என்பதை நீங்கள் முன்கூட்டியே முடிவு செய்வது நல்லது.

ஒரு விளையாட்டு வீரரை எப்படி உருவாக்குவது என்பதற்கான அனைத்து உட்பார்வைகளையும் (Insights) நீங்கள் கடந்த அத்யாயங்களில் படித்துத் தெரிந்திருப்பீர்கள். அடுத்து பிஸியோதெரபி துறையில் உள்ள பல விஷயங்களைப் பற்றி பேசலாம்.

தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com