வியாழக்கிழமை 21 பிப்ரவரி 2019

 28. ஆண்மைக் குறைவும் பெண்மைக் குறைவும்

By கே.எஸ். இளமதி.| Published: 05th December 2018 10:00 AM

                
நன்மை தீமை இரண்டேதான் உலகை ஆள்கிறது. எல்லாமே இரண்டு இரண்டாக இருக்கிறது. மனிதனுக்கு நன்மையும் தீமையும் எதற்கு, நன்மை மட்டும் இருக்கக் கூடாதா? என்று கேட்டார் நண்பர் அக்பர். நன்மை மட்டும்தானே இருக்கிறது. எங்கே தீமை இருக்கிறது என்று திருப்பிக் கேட்டேன் அவரிடம். என்ன குழப்புகிறீர்கள்? என்றார். ஆம். நீங்கள் என்ன கேட்டீர்கள்? மனிதனுக்கு நன்மையும் தீமையும் எதற்கு என்றுதானே கேட்டீர்கள். கேட்டதிலேயே முதலில் நன்மை என்றுதானே கேட்டீர்கள். நன்மை இருக்கப்போய்த்தானே 'தீமை எதற்கு' என்று கேட்டீர்கள்?  நன்மை இல்லாமல் தீமை இல்லையே. நன்மைக்குப் பிறகுதானே தீமை வருகிறது. நன்மையை முன்னிட்டுத்தான் தீமையே வருகிறது என்றேன்.  கொஞ்சம் விளக்கினால் நல்லது என்றார் அக்பர். அதாவது 'பிடித்த' விஷயத்திற்குப் பிறகுதான் 'பிடிக்காத' விஷயம் வருகிறது. பிடித்த விஷயம் நம்மிடம் இருப்பதற்கும்,  நாம் அதை விரும்புவதற்கும் அந்தப் பிடிக்காத விஷயம்தான் ஆதாரமாக இருக்கிறது. அது மறைமுகமாக இருந்து நமக்குப் பிடித்த விஷயத்தைத் தருகிறது என்றேன். ஒரு மனிதன் பிறப்பதால் எவருக்கும் எந்தப் பாதிப்புமில்லை. அவன் எப்படி வளர்கிறானோ அப்படித்தான் மற்றவர்களைப் பாதிக்கிறான்.  அவன் நல்லவனாக வளர்ந்தால் சமுதாயத்தால் போற்றப்படுகிறான். தீயவனாக வளர்ந்தால் அதே சமுதாயத்தால் வெறுத்து ஒதுக்கப்படுகிறான். தண்டிக்கப்படுகிறான். எல்லாத் தோற்றங்களும் அப்படியேதான் அக்பரே!

*


ராஜா வீட்டுக்கு வெளியே அமர்ந்து 'மொபைல்' பார்த்துக் கொண்டிருந்தான். ராஜா கொஞ்சம் வாடா என்று வீட்டுக்குள்ளிருந்து அவன் பெயரைச் சொல்லி அவனது தாயார் குரல் கொடுத்தாள். அவன் பதிலே சொல்லாமல் மொபைலிலேயே மூழ்கிக் கிடந்தான். மறுபடியும் மறுபடியும் அவன் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டுப் பார்த்தாள். அவன் ஊம்..என்று கூடச் சொல்லவில்லை. ஏன்டா செவுட்டுப் பயலே. உன்னைத் தாண்டா, உனக்குக் கண்ணுதான் போச்சு. காதுமாப் போச்சு என்று  அம்மா உரக்கக் கத்தியதும்தான் நிமிர்ந்து பார்த்தான். மரியாதையாக அழைத்தவரை அன்னையின் குரல் ராஜாவின் காதுகளில் உரைக்கவில்லை. ஆனால் 'கண்ணு போச்சா காது போச்சா' என்று கேட்டதுமே ரோஷம் வந்துவிட்டது! நிமிர்ந்து பார்த்தான். அம்மா போட்ட சத்தம் அண்டை வீட்டை எட்டியிருக்குமே என்ற ஆத்திரத்தோடு எழுந்து கோபத்தோடுச் சென்று 'கூப்பிட்டா வரமாட்டனாம்மா,  அதுக்காக நாலு வீட்டுக்குக் கேட்கற மாதிரியா மரியாதை இல்லாமக் கத்துவே?' என்று எரிந்து விழுந்தான். முதல்ல நான் மரியாதையாத்தான்டா கூப்பிட்டுப் பார்த்தேன். நீதான் கண்டுக்கவே இல்லை. அதனாலதான் உன்னை அப்படிக் கத்தினேன். நான் கத்தினதுல என்ன தப்புடா. எதுக்காகடா இவ்வளவு கோபப்படற? என்று மகன் ராஜாவைப் பார்த்துக் கத்தினாள் தாயார். மரியாதையாக அழைததவரை திரும்பிப்பார்க்காத மகன் அவமரியாதையாக அழைத்தபோதுதான் எழுந்து வந்தான்.

*


வெற்றிக்குத் தேவை தோல்வி

பிறப்பு இறப்பு, நன்மை தீமை, சிவப்பு கருப்பு, இனிப்பு கசப்பு, அழகு அசிங்கம், நல்லவன் கெட்டவன், உறவு பகை, இன்பம், துன்பம், வெற்றி தோல்வி, பெருமை சிறுமை, அதிர்ஷ்டம் துரதிஷ்டம், நினைப்பு மறப்பு, சுத்தம் அசுத்தம், சைவம் அசைவம், சிரிப்பு அழுகை, உறவு துறவு, ஞானம் அஞ்ஞானம், சம்சாரம் சந்நியாசம் என்ற இரண்டிரண்டு சொற்களில் முதல் சொல் நேர்மறையாகவும் அடுத்த சொல் எதிர்மறையாகவும் இருக்கிறது இல்லையா? தீமை நன்மை என்றோ, துன்பம் இன்பம் என்றோ, தோல்வி வெற்றி என்றோ எவரும்  மாற்றிச் சொல்வது இல்லை. 'தர்மத்தின் வாழ்வு தனைச் சூது கவ்வும்’ என்றுதான் சொன்னார்கள். 'சூது தர்மத்தின் வாழ்வு தனைக் கவ்வும்’ என்று சொல்லவில்லை. தர்மத்திற்குநப் பிறகுதான் அதர்மம் வந்தது. எனவே, நேர்மறை சொற்கள்தான் முதன்மை வகிக்கின்றன. அதாவது ஆக்கபூர்வமான எண்ணங்கள்தான் முன் நிற்கின்றன. மாறான எண்ணங்கள் அடுத்து நிற்கின்றன. இன்னும் விளக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் கட்டிடங்களுக்கு அஸ்திவாரங்கள் போல இந்த ஆக்க பூர்வமான விஷயங்களுக்கு  அடித்தளமாக இருப்பவை மாறான  எதிர்மறை விஷயங்களே! வெற்றி என்ற சொல்லுக்குப் பிறகுதான் தோல்வி என்ற சொல் வருகிறது. வெற்றி எடுத்தவுடன் வந்துவிடுவதில்லை. தோல்விக்குப் பிறகே வருகிறது. தோல்வி நடைமுறைப்படுவதற்கு முன்னதாக வெற்றி நினைவுப்படுகிறது. தவழும் குழந்தை முதற்கண் எழுந்து நிற்க நினைக்கிறது.  அதற்கு முயல்கிறது. அது குழந்தையின் மனதில் முதற்கண் தோன்றிய வெற்றி. ஆனால் அதனால் எழுந்து நிற்க முடிவதில்லை. எழ முயன்று உட்காõந்துவிடுகிறது. அதாவது வெற்றி ஏற்படுவதற்கு முன்னதாகவே தோல்வி ஏற்பட்டுவிடுகிறது. தோல்வி குழந்தையை எழவிடாமல் கீழே தள்ளிவிட்டு உட்கார வைத்துவிடுகிறது. ஆனால் குழந்தை மறுபடியும் எழ முயற்சிக்கிறது. மறுபடியும் உட்கார்ந்துவிடுகிறது. எழுந்து நிற்பது என்றால் என்னவென்று அறிவுக்கு எட்டாத பருவம்  அது. ஆனால் எழுந்து நிற்பதைக் கனவு காண்கிறது. அந்தக் கனவுதான் முயற்சிகளால் நனவாகிறது. அது நனவாவதற்குள் பலமுறை விழுந்து விழுந்து எழுகிறது. எனவே வெற்றி என்பது தோல்விக்கு முன்னதாகவே மனதிற்குள் ஆழமாக இடம் பெற்றுவிடுகிறது. வெற்றி தோல்வியை இந்த அடிப்படையில் பொருத்தி வைத்துப் பார்த்தால் வெற்றி மட்டுமே நிகழ வேண்டிய நனவாகவும், அதற்கான முயற்சியில் தடைகளை ஏற்படுத்தி அதன்மூலம் வெற்றிக்கான  பயிற்சிகளை ஏற்படுத்துவதே தோல்வியின் தத்துவமாகவும் உள்ளது. அதாவது ஆசைகளை  உண்டாக்கி  அதனை நிராசைகளாக்கி மேலும் அந்த  ஆசைகளைத் தூண்டித் தூண்டி விட்டு வெற்றியை அடையும் வரை உந்தி உந்திப் போராட வைப்பது  தோல்வியே! அந்த வகையில் பார்த்தால் வெற்றியின் முதற்படி தோல்வியே என்ற பொன்மொழி எத்தனை பெரிய உண்மை என்பதைப் பாருங்கள். இதே அடிப்படையில் நேர்மறை, எதிர்மறை  விஷயங்களையும் நுணுகிப் பார்த்தால் உண்மை தெரியும். எல்லோருக்கும் புரியும் படியாகச் சொல்ல வேண்டுமென்றால் 'ஆண்மைக் குறைவு’, 'பெண்மைக் குறைவு’ என்ற சொற்களைப் பாருங்கள். 

ஆண்மைக் குறைவும் பெண்மைக் குறைவும்

முதற்கண் ஆண்மை உள்ளது. அது என்றும் இருப்பது. அதன்பிறகுதான் அதற்குக் குறைவு ஏற்படுகிறது. முதற்கண் பெண்மை உண்டு. அதன்பிறகுதான் பெண்மைக் குறைவு ஏற்படுகிறது. ஆனால் குறை என்பதும் எதிர்மறை வார்த்தைகளும் மனதைப் பாதித்து இடம் பிடித்துவிடுகின்றன என்பதுதான் மனிதனின் துரதிர்ஷ்டம்! அதனால்தான் திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரைத் தொடர்களில் மனதைக் கலக்கும் மோசமான எதிர்மறை வசனங்களும் வார்த்தைகளும் வலுவாகச் சேர்க்கப்படுகின்றன. எல்லாம் பார்வையாளர்களைப் பெருக்கும் வியாபார நோக்கம். சண்டைக் காட்சிகள் மனிதனை வன்நெஞ்சனாக மாற்றும் முறையில்  உருவாக்கப்படுகின்றன. மனம் அதைத்தான் நாடும். காரணம் நல்லதைத் தீயதாகவும், தீயதை நல்லதாகவும் பாவிப்பது மனதின் இயல்பு. இந்த இயல்பை மூலதனமாக்கித் தங்கள் தொழிலை அபிவிருத்திச் செய்து கொள்கிறார்கள் சுயநலமிகள். இந்த வியாபாரிகளே குறைகளை மனதில்ஆழப்படுத்தி புதைத்து அதை நிவர்த்தி செய்கிறோம்  பேர்வழி என்று அவர்களை இறுதிவரை சக்கையாகப் பிழிந்துப் பணத்தைக் கறந்துவிடுகிறார்கள். அத்துடன் அந்தக் குறைகளிலும் அவர்களை நிரந்தரமாகத் தள்ளிவிடுகிறார்கள்! காரணம் எப்போதுமே எழுந்து நிற்க முடியாதபடி அவர்களது மனக் கால்களைப் பலமாக ஒடித்து விடுகிறார்கள்.

ஆனால் வெற்றிக்குத் தோல்வியே பின்னணி. அது போல, ஆண்மை/பெண்மை பலத்திற்கும் குறைகளே பின்னணி. குறை என்று தெரியாத காலத்தில் ஆண்மைக் குறை அடைபவன் திரும்பத் திரும்ப முயற்சித்து ஒருநாள் வெற்றியை எ ட்டிவிடுவான்.ஆனால் வியாபாரிகளால் குறை என்று பிரகடனப்படுத்தப்பட்ட பிறகு, தானே அந்தக் குறையை நிரந்தரமாகத் தக்க வைத்துக்கொள்கிறான். ஆண்மை பெண்மைக் குறைபாடுகள் 99 சதவீதம் மனதால் ஏற்படுவதே. மனம் இடம் தராதபோது அதில் செயல்பாடுகள் வெளிப்படாது. பெண்ணைப் பலவந்தமாகக் கற்பழித்து வன்புணர்ச்சி செய்யும் போது வலியால் துடிதுடித்துப்போய் மரணத்தை எய்துகிறாள். காரணம் அவள் மனதால் இடம் தர மறுக்கிறாள். மனம் இடம் தராதபோது எப்படி இன்பம் சித்திக்கும்? வேறு வழியில்லாமல் உணர்ச்சிக்குப் பழியாகி கற்பழிப்புக்கு இடமளிப்பவள் அதனை ஏற்றுக் கொள்கிறள்; இன்புறுகிறாள். காரணம் மனம் ஒத்துக்கொள்கிறது. ஊசி இடம் தராமல் நூலைக் கோர்க்க முடியாது என்பார்கள்.
இடமளித்தால் ஊசி இன்புறும். இடமளிக்காத பட்சத்தில் உடையும் வரை ஊசி போராடும்.  உடைந்துவிட்டால் உயிர் அடங்கிவிடும். இதுதான் உண்மை. 

புற்று நோய்கள்

புற்று நோய் 'உயிர்க்கொல்லி’ நோய் என்று பிரகடனப்படுத்தப்பட்டபிறகுதான் மரண விகிதங்கள் அதிகப்பட்டன. அது ஒரு நோய் என்று அறியப்படாத காலத்தில் அதனால் இறந்தவர்கள் எண்ணிக்கையே இல்லை, அல்லது இருந்த சிலவும்  வெளிப்படவில்லை. வேறு காரணங்களால் கூட இறந்திருக்கலாம். ஆனால் அந்த நோயினால்தான் இறந்தார் என்று கூறி நோய்க்கு வலுவூட்டிய வியாபாரிகளால் நோய் பரவ ஆரம்பித்தது. காரணம் எதிர்மறைச் சிந்தனை. அது பரப்பப்படும் போது பலரும் நோயற்று, அதற்குப் பலியாக ஆரம்பித்தார்கள். புண்ணுற்றவர்கள் அனைவருமே  அதைப் புற்று நோயாகப் பாவித்து வளர்க்கத் தொடங்கினார்கள். 

கட்டிகள் தோன்றுவது காலங்காலமான  உடல்கூற்று விளைவுகள். அதைப் புற்றுநோயாக்கி. கட்டி வந்த அனைவருமே புற்று நோயாளிகளாக கருதப்பட்டனர். இப்படியாகத்தான்  புற்று நோய்கள் பரவியன, முற்றின....அதனால் மருத்துவ வியாபாரமும் பெருகியது. ஒரு தடவை ஆண்மைக் குறை உற்றவன் மறுமுறையும் 'அந்த நினைவால்’ மட்டுமே குறைவடைகிறான்.

ஆண்மைக் குறைவு உடலில் இல்லை. உடல் வழக்கம்போல ஆண்மையில் விழிக்கிறது. ஆனால் சேர்க்கையின் போது முன்பு ஏற்பட்ட குறைதான் நினைவில் வந்து குறுக்கிடுகிறது. உடனே தோல்விக்குப் பழியாகிவிடுகிறான். தனக்கு ஆண்மை முற்றிலுமாகப் பறிபோய்விட்டது என்று நம்புவது எத்தனை பெரிய அறியாமையோ அதுபோலவே ஒரு கட்டியோ புண்ணோ வந்துவிட்டால் தனக்குப் புற்றுநோய்தான் வந்துவிட்டது என்று நம்புவதும் அறியாமைதான். இந்த உண்மை எத்தனைப் பேருக்குத் தெரியும்? விழுந்த குழந்தை மீண்டும் எழும்போது விழுந்த பயமும் எழத்தான் செய்கிறது. ஆனாலும் குழந்தை எழுந்து நிற்க முயல்கிறது. ஆறறிவு உள்ள ஆண்மகன் இந்த விஷயத்தில் அறிவில்லாத குழந்தையைவிடக் குழந்தையாகிறான். அதனால்தான் படுக்கையில் துவளுமபோது  பச்சைக் குழந்தை போல மனைவியின் முன் வெட்கத்தை விட்டு அழுகிறான். அவனது அழுகையை அன்னையின் ஸ்தானத்தில் இருந்து பார்க்கும் மனைவி அனுதாபப்பட்டு அவனுக்காக இரங்கி வருகிறாள். அவளது கருணை அவனை ஒருநாள் மீண்டும் வெற்றி பெற வைத்துவிடுகிறது. மனம் எப்போதும் ஒரே நிலையில் இருப்பதில்லை. அது குறைபட்டிருக்கும்போது ஆண்மை/பெண்மைக்  குறைபாடு ஏற்படுகிறது. மனைவியின் மனக்குறைகலும் அவளுக்குப் பெண்மைக் குறைவை ஏற்படுத்துகிறது. உண்மையில் ஆணை விடப் பெண்தான் அதிகம் பெண்மைக் குறைபாடுள்ளவளாக இருக்கிறாள். அவளுக்குத்தான் தாய் வீட்டைப் பற்றி, கணவனைப் பற்றி, பிள்ளைகளைப் பற்றி, குடும்பத்தைப் பற்றிய கவலைகள். அதனால்தான்  பெண்மைக் குறையிலிருந்து அவ்வளவு எளிதாக அவள் வெளி வரமாட்டாள். இயல்பாகவே இக்குறை எல்லாக் குடும்பப் பெண்களிடமும் இருந்துகொண்டுதான் இருக்கிறது.
கணவன்  அணுகும்போதெல்லாம் தட்டிக் கழிப்பதன் அர்த்தம் அவளுக்குள் இருக்கும் “ஆயிரத்தெட்டு” மனக் குறைகள். எனக்குப் பெண்மைக் குறைவு வந்துவிட்டது என்று  மனைவி போய் மருத்துவரிடம் சொல்லி மருந்து கேட்பாளா? 'சீ..சீ.. இந்தப் பழம் புளிக்கும்’ என்பது முயன்று தோற்ற நரியின் முடிவு. வேண்டாம் இந்தச் சுகம் என்று விட்டொழிப்பவர்கள் நம் பெண்கள். அதற்காக நம் ஆண்கள் பெருமைப்பட வேண்டும். வேண்டும் என்றால்தானே குறை? வேண்டாம் என்று விட்டுவிட்டால் ஏது குறை? 'வேண்டும்’ என்று முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்மகனே வேண்டாத  குறைகளுக்குப் பழியாகிறான்!  

ஞானம் பெருகும்.. 

Tags : Man Relationship woman ஆண் பெண் உறவு நன்மை problems உறவு நிலை

More from the section

38. சரணாகதி
37 வினைகளுக்குத் தப்பிக்க முடியுமா?
36. குடும்பத்தில் சீரியல் பாதிப்பா?
35. கள்ளக் காதலி
34 . காதல் திருமணங்கள்