இந்தியா

2021-22-க்கான தேசிய சேவைத் திட்ட விருது: குடியரசுத் தலைவர் முர்மு வழங்கினார்

30th Sep 2023 05:48 PM

ADVERTISEMENT

 

2021-2022ஆம் ஆண்டிற்கான தேசிய சேவைத் திட்ட விருதுகளைக் குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார். 

மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் நிறுவப்பட்ட தேசிய சேவைத் திட்ட விருதுகளை என்எஸ்எஸ் தன்னார்வலர்கள், திட்ட அலுவலர்கள், பல்கலைக்கழகங்கள்/+2 கவுன்சில்களுக்கு அவர்களின் தன்னார்வ சேவையை அங்கீகரித்து ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. 

படிக்க: முன்னோர்களை வீட்டிற்கு அழைக்கத் தயாராகுங்கள்: மஹாளயபட்சம் ஆரம்பம்!

ADVERTISEMENT

அதன்படி இந்தாண்டு, டாக்டர் ராம்வீர் சிங் சௌகான், டாக்டர் மிதாலி கத்கடியா, டாக்டர் ரஞ்சனா ஷர்மா, டாக்டர் மல்கியத் சிங், டாக்டர் ராகவேந்திர ஆர், டாக்டர் எஸ் லெக்ஷ்மி, டாக்டர் இந்திரா பர்மன், டாக்டர் பவன் ரமேஷ் நாயக், டாக்டர் ரேணு பிஷ்ட், டாக்டர் ஜோசப் வன்லால்ஹ்ருயா சைலோ, பபிதா பிரசாத் உள்ளிட்டோருக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT