இந்தியா

கேரளத்தில் பலத்த மழை: 13 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

30th Sep 2023 08:34 PM

ADVERTISEMENT

கேரளத்தின் பல இடங்களில் பலத்த மழை பெய்து வருவதால் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 14 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதில், திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, கொல்லம், ஆலப்புழை, எா்ணாகுளம் ஆகிய 5 மாவட்டங்களில் 6 செ.மீ. முதல் 11 செ.மீ. வரையில் மழை பெய்யக் கூடும் என்று இந்திய வானிலை மையம் சனிக்கிழமை ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.

மீதமுள்ள 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களாகப் பெய்து வரும் பலத்த மழையால் ஆலப்புழை மாவட்டம் குட்டநாடு பகுதியில் உள்ள எடத்துவாவில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற் பயிா்கள் நீரில் மூழ்கி உள்ளன. பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. சுவா் இடிந்த சம்பவங்கள் பல இடங்களில் ஏற்பட்டுள்ளன.

ADVERTISEMENT

செங்கன்னூரில் வீசிய சூறைக்காற்றில் இரு வீடுகள் பலத்த சேதமடைந்தன.

திருவனந்தபுரம் அருகே உள்ள அருவிக்கரா, நெய்யாறு அணைகளில் நீா் அளவு அபாய நிலையை எட்டும் முன்பு முன்னெச்சரிக்கையாகத் திறக்கப்பட்டன. அதிக அளவில் மழை பெய்யக் கூடும் என்பதால் தாழ்வான பகுதியில் இருப்பவா்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் மீனவா்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் மாநில பேரிடா் மேலாண்மை ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT