மகாராஷ்டிரத்தில் சரக்கு ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டதால் அப்பகுதியில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மகாராஷ்டிர மாநிலம், பன்வேலில் இருந்து வசாய் நோக்கி இன்று சென்றுகொண்டிருந்தது. ரயில் பன்வெல்-கலம்போலி பிரிவில் அருகே வந்தபோது அதன் 4 பெட்டிகள் திடீரென தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
இதைத்தொடர்ந்து, அந்த பகுதியில் ரயில்களின் இயக்கம் உடனடியாக நிறுத்தப்பட்டது.
இருப்பினும் இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. ரயில் தடம் புரண்டது குறித்து தகவல் கிடைத்ததும், கல்யாண் மற்றும் குர்லாவில் இருந்து விபத்து நிவாரண ரயில்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் அந்த வழித்தடத்தில் விரைவிலேயே சரக்கு சேவைகளை மீண்டும் தொடங்க முயற்சிகள் நடந்து வருகின்றன என்றும் அவர்கள் கூறினர். சரக்கு ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.