இந்தியா

நாக்பூரில் 109 ஏக்கர் நிலம் வாங்கிய கோத்ரேஜ் பிராப்பர்டீஸ்!

29th Sep 2023 07:12 PM

ADVERTISEMENT

 

புதுதில்லி:  ரியல் எஸ்டேட் நிறுவனமான கோத்ரெஜ் பிராப்பர்டீஸ் லிமிடெட், நாக்பூரில் சுமார் 109 ஏக்கர் நிலத்தை, குடியிருப்பு மனைகளாக மாற்றுவதற்கு கையகப்படுத்தியுள்ளது. சுமார் ரூ.200 கோடிக்கு இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.

கோத்ரேஜ் பிராப்பர்டீஸ் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான கௌரவ் பாண்டே இது குறித்து தெரிவித்ததாவது:

புதிய நிலத்தை கையகப்படுத்துவது நாக்பூரில் எங்கள் இருப்பை மேலும் அதிகரிக்கும். கோத்ரெஜ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஒரு பிரிவான கோத்ரெஜ் பிராப்பர்டீஸ், நாட்டின் முன்னணி ரியல் எஸ்டேட் டெவலப்பர்களில் ஒன்றாகும். தற்போது தில்லி-என்.சி.ஆர், மும்பை, பெங்களூரு மற்றும் புனே சந்தைகளில் குடியிருப்பு திட்டங்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்து வருகிறோம்.

ADVERTISEMENT

நடப்பு நிதியாண்டில், விற்பனை முறையில், 14 சதவிகிதம் வளர்ச்சி கண்டு, 14 ஆயிரம் கோடி ரூபாயாக உயரும் என நிறுவனம் எதிர்பார்க்கிறது. அதே வேளையில் 2023-24 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில், கோத்ரெஜ் பிராப்பர்டீஸ் விற்பனையானது ரூ.2,520 கோடியிலிருந்து 11 சதவீதம் குறைந்து ரூ.2,254 கோடியானது. நிதி செயல்திறனைப் பொறுத்தவரை, கோத்ரெஜ் பிராப்பர்ட்டீஸ் ஜூன் காலாண்டில் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.45.55 கோடியிலிருந்து கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்து ரூ.124.94 கோடியாக உள்ளது.

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மொத்த வருவாய் ரூ.426.40 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.1,265.98 கோடியானது. சமீபத்தில், கோத்ரெஜ் பிராப்பர்ட்டீஸ் லிமிடெட் வலுவான தேவையைத் தொடர்ந்து நொய்டாவில் உள்ள அதன் புதிய வீட்டுத் திட்டத்தில் கீழ் ரூ.2,000 கோடிக்கு மேல் மதிப்புள்ள சுமார் 670 பிளாட்களை விற்றதாக தெரிவித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT