மகளிர் இடஒதுக்கீடு மசோதா வெற்று வாக்குறுதியாக பாஜக நினைக்கிறது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கார்கே..
மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் 5 ஆண்டுகளில் செய்ததை, பாஜகவால் 15 ஆண்டுகளில் செய்ய முடியாது.
சத்தீஸ்கரில் விவசாயிகள், தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலுனுக்காக காங்கிரஸ் அரசு செய்த நலப் பணிகளைக் கண்டு பாஜக ஆச்சரியப்பட வேண்டும்.
பஞ்சாயத்து அமைப்புகளில் மகளிர் இடஒதுக்கீட்டை உறுதி செய்வதற்காக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொண்டு வந்தது தான். அதைத் தான் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, இது ஒன்றும் புதிதல்ல.
படிக்க: பெங்களூருவில் இன்று நள்ளிரவு முதல் 144 தடை!
மக்கள் தங்களுக்கு வாக்களித்தவுடன், வாக்குறுதிகளை மறந்துவிடுவார்கள் என்று பாஜக நினைக்கிறது. மகளிர் இடஒதுக்கீடு மசோதா ஒரு வெற்று வாக்குறுதி தான். பாஜக ஏழைகளை அழித்து, பணக்காரர்களை ஊக்குவித்து வருகிறது.
நாட்டில் அரசியல் சாசனத்தையும் ஜனநாயகத்தையும் காப்பாற்ற மக்கள் காங்கிரஸையும் அதன் தலைவர் ராகுல் காந்தியையும் ஆதரிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.