மும்பை: நகை சில்லறை விற்பனையாளரான மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் அடுத்த நிதியாண்டில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் 95 கடைகளை திறக்க ரூ.4,000 கோடி வரை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தற்போது மலபார் கோல்டு நிறுவனத்திற்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளிலும் 330 கடைகள் உள்ளது.
2025ஆம் நிதியாண்டில் ஆஸ்திரேலியா, வங்கதேசம், கனடா, அமெரிக்கா, ஐரோப்பா, எகிப்து உள்பட நாடு முழுவதும் 63 புதிய கடைகளையும், வெளிநாடுகளில் 32 கடைகளையும் திறக்க திட்டமிட்டுள்ளோம் என்றார் மலபார் குழுமத்தின் தலைவர் எம்.பி.அகமது.
இது குறித்து அகமது செய்தியாளர்களிடம் மேலும் தெரிவித்ததாவது:
கேரளாவின் கோழிக்கோட்டை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனம் மும்பையில் மலபார் நேஷனல் மையத்தை திறந்தது வைத்தார் மகாராஷ்டிரவின் துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ்.
தற்போது மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனத்திற்கு இந்தியாவில் 189 கடைகளும், வெளிநாடுகளில் 141 கடைகளும் என மொத்தம் 330 கடைகள் உள்ளன.
உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தற்போதுள்ள எங்கள் சந்தைகளை வலுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் ஆப்பிரிக்கா போன்ற புதிய சந்தைகளிலும் நாங்கள் வாய்ப்புகளையும் ஆராய்ந்து வருகிறோம். 2023 நிதியாண்டில் ரூ.40,000 கோடியாக இருந்த ஒட்டுமொத்த வருவாயை 2025-26 ஆம் ஆண்டில் ரூ.60,000 கோடியாக எதிர்பார்க்கிறோம்.
தற்போது 15 உற்பத்தி கூடங்கள் உள்ளன. அவற்றில் இந்தியாவில் 10 உள்ளன. மீதமுள்ளவை வளைகுடா நாடுகளில் உள்ளன. வங்கதேசத்தில் ஒரு உற்பத்தி ஆலையைத் திறக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம். இது இந்த நிதியாண்டில் செயல்பாட்டுக்கு வரும் என்று நாங்கள் நம்புகிறோம்.
ஐபிஓ கொண்டு வருவதற்கான நிறுவனத்தின் திட்டங்கள் குறித்து அகமது கூறுகையில், எங்களுக்கு இப்போது மூலதனம் தேவையில்லை என்றார். நாங்கள் எங்கள் வணிகத்தை ஒருங்கிணைத்து ஐபிஓவுக்கு தயாராகி வருகிறோம். குறைந்தபட்சம் 2024-25 வரை ஐபிஓவுக்கான எந்த திட்டமும் எங்களிடம் இல்லை.
நிறுவனம் மகாராஷ்டிரத்தில் ரூ.700 கோடியை முதலீடு செய்துள்ளதாகவும், விரிவாக்கத்திற்காக மேலும் ரூ.1,000 கோடியை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் இது 2024-25க்குள் மாநிலத்தில் 4,000 வேலைகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.