இந்தியா

சோமநாதர் கோயிலில் இஸ்ரோ தலைவர் வழிபாடு!

28th Sep 2023 04:12 PM

ADVERTISEMENT

 

குஜராத் மாநிலம், சௌராஷ்ட்ராவில் உள்ள சோமநாதர் கோயிலில் இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத் வழிபாடு நடத்தினார். 

இஸ்ரோ கடந்த மாதம் 14-ஆம் தேதி விண்ணில் செலுத்திய ‘சந்திரயான்-3’ விண்கலத்தின் ‘விக்ரம்’ லேண்டா் கடந்த 23-ஆம் தேதி நிலவின் தென்துருவப் பகுதியில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. லேண்டரில் இருந்து வெளியேறிய ‘பிரக்யான்’ ரோவரும் நிலவின் மேற்பகுதியில் ஆய்வுப் பணிகளைத் தொடங்கியுள்ளது.

நிலவின் தென்துருவப் பகுதியில் விண்கலத்தை வெற்றிகரமாகத் தரையிறக்கிய முதல் நாடு என்ற சாதனையை இந்தியா படைத்தது. அதற்கு உலக நாடுகள் பல பாராட்டுகளைத் தெரிவித்தன. 

ADVERTISEMENT

இந்த நிலையில் 12 ஜோதிர் லிங்களில் ஒன்றான சோமநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் மேற்கொண்ட இஸ்ரோ தலைவர் சந்திரயான்-3 நிலவில் தரையிறங்குவதில் எடுத்த முயற்சியில் சோம்நாதர் ஆண்டவரின் ஆசீர்வாதமும் உள்ளது என்று அவர் கூறினார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT